தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்
காஞ்சியை தலைநகராக கொண்டு ஆண்ட பல்லவ மன்னர்களின் வம்சத்தினர் காஞ்சிராயர்(கச்சிராயர்).
நமது வன்னிய இனத்தில் மிகுந்த வலிமையுடன் திகழ்ந்தவர்கள் கச்சிராயர்கள்.
கச்சிராயர்கள் பற்றி முக்கியமானவற்றை மட்டும் இப்போதைக்கு குறிப்பிடுகிறேன்.
இவர்கள் வேறு யாருமல்ல வீர மிகு அரசனான காடவராயன் கோப்பெருஞ்சிங்கனின் வழித்தோன்றல்கள்.கோப்பெருஞ்சிங்கனின் சந்ததியினர்.இதற்கு அசைக்கமுடியாத ஆதாரங்கள் உள்ளன.
நான் சில வரலாற்று நூல்களை ஒப்பிட்டுப் பார்த்து சில தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டேன்.
அதாவது
பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின்போது காடவராயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இறுதியாக பெரு நிலப் பரப்பை ஆட்சி செய்த இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனோடு காடவராயர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.
சரி அப்போது காடவராயர் ஆட்சி மறைந்த பிறகு அவர்கள் ஆட்சி செய்த பகுதிகள் என்னவாயின?யார் அவற்றை ஆண்டார்கள்?விடையும் கிடைத்தது.
2 ஆம் கோப்பெருஞ்சிங்கனின் மறைந்த பின்னர் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் ஆட்சியாளர்களாயினர்.
எங்கெல்லாம் கச்சிராயர் ஆண்டனர்?
கோப்பெருஞ்சிங்கனது செல்வாக்கு வட தஞ்சை வரை பரவியிருந்தது செய்தி. எனவே இம்மன்னன் ஆட்சி செய்த நிலப்பகுதிகளில் கச்சிராயர்கள் பலர் சிறு ஆட்சியாளர்களாக ஆனார்கள்.
காடவராயர் எப்படி கச்சிராயர் ஆனார் என்ற வினா தோன்றும் .இல்லையா? காடவராயர்களுக்கு கச்சிராயர் என்ற குல பட்டப்பெயரும் உண்டு.
சிறந்த மன்னனான காடவராயன் கோப்பெருஞ்சிங்கனின் தந்தையார் ஒரு கச்சிராயர்தான்.
இனி பாண்டியர் காலத்தில் காடவராயர் அரசு முடிவுக்கு வந்த பின்னர் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறார் ஒரு கச்சிராய குறுநில மன்னர்.
"பருவூர் உடையார் தேவர் கச்சிராயர் பிள்ளைகளில் காளத்திரிநாதர்" என்பவர் அறியப்படுகிறார்.(கி.பி 1313 ஆம் ஆண்டு)
அதன் பின்னர் விருத்தாச்சலத்தில் உள்ள சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டொன்றில் (கி.பி. 1360)
"இருங்கோளப்பாடி நாட்டுப் பருவூருடையான் தேறையராயன் பொன் வழங்கினான் மகன் கட்டி தேவனான சுந்தர்ப் பாண்டிய கச்சிராயன்"
என்ற குறுநில மன்னர் அறியப்படுகிறார்.
இவர்களே ஆண்ட பருவூர் தான் பின்னர் முகாசா பரூர் ஆகியது. இவர்களே முகாசா பரூரை ஆண்ட கச்சிராயர்கள் ஆவார்கள்.
கச்சிராயர்களுள் வலிமை மிக்கவர்கள் பரூர் கச்சிராயர்கள்தான்.
இப்போது இக்கச்சிராயர் வழி வந்த திரு.பாலதண்டாயுதபாணி கச்சிராயர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் முக்கிய கோவில்களுள் ஒன்றான கோனான்குப்பம் மாதா கோவில் முதலில் ஒரு சிறு கோலிலாக இக்கச்சிராய மன்னரால் எழுப்பப்பட்டது. பின்னர் இங்கு வந்த வீரமாமுனிவர் கி.பி 1720 இல் பெரிய கோவிலாக இதனைக் கட்டியுள்ளார்.
பரூர் கச்சிராயர்கள் வம்சாவளிப் பட்டியல் ஒன்றும் உண்டு.
பரூர் கச்சிராயர்களைப் போல வலிமையான இன்னொரு வன்னியர் குல கச்சிராயர் விளந்தை கச்சிராயர் ஆவார். விளந்தை என்பது இன்றைய ஆண்டிமடத்தைச் சேர்ந்த ஒரு பகுதியாகும்.
விளந்தையை ஆண்டகச்சிராயர் பற்றியும் குறிப்புகள் உள்ளன. அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்களுள் ஒருவர்தான் "வெட்டுங்கை அழகிய கச்சிராயர்" என்பவர்.
இவர்களைத் தவிர திருக்கனங்கூர், தியாகவல்லி,ஓலையாம்பூதூர் ஆகிய பகுதிகளிலும் கச்சிராயர்கள் பாளையக்காரகளாக விளங்கினர்.
இவர்கள் அனைவரும் வன்னிய குலத்தினராவர்.
பருர்(முகாசா) கச்சிராயர்கள் முதலில் குறுநில மன்னர்களாகவும்,விஜயநகர பேரரசின் காலத்தில் ஆட்சியாளர்களாஅகவும் பின்னர் நாயக்கர்(நாயுடு) ஆட்சியின்போது பாளையக்காரகளாகவும். அதன் பின்பு ஜமின்ந்தாராகவும் தொடர்ந்து இப்பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளனர்.
இக்கச்சிராயர் பரம்பரையில் இன்று அறியப்படுபவர்கள் திரு.பாலதண்டாயுதபாணி கச்சிராயர், திரு.ரமேஷ் கச்சிராயர் என்பார்.
பரூர் கச்சிராயர் பற்றி அறிய முடிந்தது.சரி. விளந்தை கச்சிராயர்கள் என்னவாயினர்?
இப்போதும் விளந்தைப் பகுதியில் கச்சிராயர் மரபினர் உள்ளனர்.
சரி விளந்தை கச்சிராயர்கள் பரூர் கச்சிராயர் போன்று நெடுங்காலம் ஆட்சி செய்தனரா?பார்ப்போம்.
விளந்தையில் கச்சிராயர் ஆட்சி கி.பி 17 ஆம் நூற்றாண்டளவிலும் இருந்தது.கி.பி 18 ஆம் நூற்றாண்டளவில் கச்சிராயர் ஆட்சி முடிந்தது. ஏன்?
கி.பி 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விளந்தையின் ஆட்சி மாறியது.வன்னிய ஆட்சியாளர் குடியினரான ஒரு சாரார் (வாண்டையார்) ஆட்சி பொறுப்பை ஏற்றனர்.
எனவே கி.பி 18 ஆம் நூற்றாண்டில் விளந்தையில் வாண்டையார்கள் ஆட்சி தொடங்கியது.
இவர்களும் வன்னிய குலத்தவரே. பிச்சாவரம் சோழனாருக்கும்,காட்டகரம் தேவருக்கும் இவர்கள் உறவினர்கள்.
தற்போது இப்பரம்பரையில் வந்தவர்களான திரு.லோகநாத வாண்டையார்
அவரது மகன்கள் திரு.சண்முகநாத வாண்டையார், திரு கமலநாத வாண்டையார் என்போர் விளந்தையில் இருக்கிறார்கள்.