Friday, November 2, 2012

கி.பி.7 ஆம் நூற்றாண்டு மஹேந்திரவர்ம பல்லவர் காலத்திய கல்வெட்டு : காடந்தைகள் என்பாருக்கும், புதுப்பள்ளிகளுக்கும் நடைபெற்ற போரில் எருமைநாட்டு அதிகாரி ஒருவன் மாண்டான் என்ற செய்தி


ஆதாரம்: தருமபுரி மாவட்டம் பலிஞ்சரஹள்ளி எனும் ஊரில் உள்ள நடுகல் கூறும் செய்தி.


இதன் காலம் கி.பி.7 ஆம் நூற்றாண்டு.மஹேந்திரவர்ம பல்லவர் காலத்தியது.

"கோவிசைய மயீந்திர பருமற்கு

யாண்டைந்தாவது காடந்தைகள்
சேவகன் புதுப்பள்ளிகளோடு பொருத
ஞான்று பட்டா நெருமேதிகாரி"


(தருமபுரி கல்வெட்டுக்கள், தொகுதி 2, எண். 1973/26)

காடந்தைகள் என்பாருக்கும், புதுப்பள்ளிகளுக்கும் நடைபெற்ற போரில் எருமைநாட்டு அதிகாரி ஒருவன் மாண்டான் என்பதே செய்தி.

Monday, October 22, 2012

வன்னிய குல பல்லவ மன்னர் "மாமல்லன்" நரசிம்ம பல்லவர் கதை சொல்லும் , எம்ஜிஆர் அவர்கள் நடித்த "காஞ்சி தலைவன்" திரைப்படம் :
                                                                      பகுதி 1 


பகுதி 2


பகுதி 3


                                                                              பகுதி 4


                                                                               பகுதி 5


பகுதி 6


பகுதி 7பகுதி 8


பகுதி 9


பகுதி 10பகுதி 11


பகுதி 12


பகுதி 13


பகுதி 14


பகுதி 15


Sunday, October 7, 2012

பல்லவர் கால திருமால் சிலை: விருத்தாசலம் அருகே கண்டெடுப்பு : -- முகாசா பரூர் கச்சிராயர்
பண்ருட்டி: விருத்தாசலம் அருகே 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால திருமால் சிலையும், கச்சிராயர்களின் கல்வெட்டுகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, பண்ருட்டி கல்வெட்டு ஆய்வாளர் தமிழரசன், நிருபர்களிடம் கூறியதாவது :- கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த முகாசா பரூரில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள், ஆய்வில் கண்டறியப்பட்டன. மேலும், சங்க காலத் தொடர்புடைய இவ்வூரில், பல்லவ மன்னர்கள் காலத்தில் திருமால் கோவிலும், சிவன் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. காலப்போக்கில் அவை, முற்றிலும் சிதைந்து போயின. வேற்று மதத்தவர் படையெடுப்பில் சிதைக்கப்பட்டுள்ளன.


அவற்றில் பெருமாள், தாயார், கருடாழ்வார், பாய்கலைப்பாவை எனப்படும் கொற்றவை சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. ஆனால், ஒரே ஒரு திருமால் சிலை மட்டும் பின்னமில்லாமல், முழுமையாக, அக்காலத்தில் மறைத்து பாதுகாத்து வைத்துள்ளது தெரியவந்துள்ளது. 199 செ.மீ உயரமும், 82 செ.மீ அகலமும் கொண்ட இத்திருமால் சிற்பம், காண்பதற்கு அரிய, கலைநுட்பம் மிகுந்த பல்லவர்கால படைப்பு.


கோவில் திருச்சுற்றில் கிடந்த மண்டபத்தூண்கள் சிலவற்றை புரட்டி பார்த்தபோது, கச்சிராயர் சிற்பங்களும், கல்வெட்டுகளும் கண்டறியப்பட்டன. 'சாலி வாகன சகாப்தம் 1672 இதற்கு மேல் செல்லா நின்ற பிறமாதூத வருடம் ஐப்பசி மாதம் 27ம் தேதி பருவூரார் ஸ்ரீமுத்து கிருஷ்ணப்ப கச்சிராயர் தாயார் பெரியம்மை அம்மாள் தர்மம்' என்றும், அதன் மேற்புறத்தில் அம்மையின் சிற்பமும், இதே ஆண்டை கூறும் மற்றொரு தூண் கல்வெட்டில் 'பருவூரார் ஸ்ரீபொன்னம்பலக் கச்சிராயர் குமாரர் முத்துகிருஷ்ணப்பக் கச்சிராயர் தர்மம்' என்றும், அதன்கீழ் அவரது சிற்பமும் காணப்படுகிறது.


மேற்கண்ட கல்வெட்டுகளின் ஆண்டு மற்றும் தேதிக்கு, சரியான ஆங்கில ஆண்டு, 1750 நவம்பர் முதல் வாரமாகும். கச்சிராயர் என்பவர்கள், காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரத்தை தலைமையிடமாக கொண்டு அரசாண்ட பல்லவ மன்னர்களின் வழிவந்தவர்கள். பிற்காலத்தில் இவர்கள் சோழர்-பாண்டியர் ஆளுகையின் போது குறுநில மன்னர்களாக இப்பகுதியில் ஆட்சி செய்து, முகமதியர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிகளின் போது தன்னாட்சி அதிகாரம் பெற்றிருந்தனர். எனவே, 'முகாசா' பரூர் என்று இவ்வூர் அழைக்கப்படுகிறது என வரலாறு கூறுகிறது. இக்கோவிலை, கச்சிராயர்களே கட்டியுள்ளனர் என்பதும், இவ்வூரின் பழமையான பெயர் பருவூர் என்றும், ஆய்வின் மூலம் தெரியவருகிறது. இவ்வாறு கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் கூறினார்.


Source :http://www.dinamalar.com/General_detail.asp?news_id=23354

Wednesday, September 12, 2012

வந்தியத்தேவன் (வன்னியதேவன் அல்லது வன்னிய ரேவன் ) :
வந்தியதேவன் யார் ? என்ன குலம்? இப்போது இவர்கள் பிரிவு இருக்கிறார்களா ? இது போன்ற கேள்விக்கு என்னால் ஆனா விடை ..

இவன் பெயரை வைத்து இவன் இவன் எங்கள் இனம் உங்கள் இனம் என்ற சில சண்டைகளை இணையதளங்களில் பார்க்க முடிந்தது . அதனாலே இதை பற்றி எழுத முற்ப்பட்டேன் ..

பொன்னியின் செல்வனின் கதாநாயகனும் , ராஜ ராஜனின் தமக்கை குந்தவை நாச்சியாரை மனம் முடித்தவனும் இவன்தான் .... வந்தியத்தேவன் என்னும் இவன் வாணர் குலத்தவன் ...

வாணர் குல அரசன் .. பல்லவர் நாடு எனப்படும் வட தமிழ்நாடு (தொண்டைமண்டலம் ) பகுதியிலிருந்து வந்தவன் .

வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டுக்கு மன்னர். முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். ...

வாணர் குலத்தவர்கள் "வானத்தரையர் " என்ற பட்டம் கொண்டவர்கள் ... சிதம்பரம் அருகில் உள்ள "வல்லம்படுகை " என்னும் கிராமத்திலும் அதை சுற்றிலும் வாழும் வன்னியர்கள் இந்த "வானத்தரையர் "என்னும் பட்டம் கொண்டவர்கள்.. வானத்தரையன் என்னும் சொல் வாணர் குலத்தை குறிக்கும் .. இவன் ஆண்ட பிரம்மதேசம் என்பது இன்றைய வட ஆர்க்காடு பகுதியாகும் ..

Etymologically, and also as per inscription at Tirumalai hill, near Polur, the correct name may be Vanniathevan or Vanyadevan (of the Vanniar caste) who was a Pallava prince ..

சோழர்கள் ஆட்சி வீழ்ந்தபோது தொடர்ந்து சம்புவராயர்,காடவராயர்,வாணகோவரையர் எனும் பெயர்களில் வன்னியர்கள் ஆட்சி செய்தனர்.

இந்த தகவல் "வரலாற்றில் பெண்ணாகடம்" எனும் நூலில் உள்ளது. வாணகோவரையர்கள் (வாணர் குலத்தவர்கள் ) வன்னிய அரசர் என்பது இதன்மூலம் தெரிகிறது.


இவனை பற்றிய மணிமங்கலம் கல்வெட்டுகள் என்னும் தலைப்பில் உள்ளவையும் இவனை "வன்னிய ரேவன்" என்னும் பெயரால் குறிக்கிறது .. ரேவன் என்னும் சொல்லே இப்போது தேவன் என்று குறிப்பிட படுகிறது .

இவனது தலைநகரத்தில்தான் ராஜேந்திரன் இயற்க்கை எய்தினார் என்றும் சொல்ல படுகிறது . அவரின் சமாதி பிரம்மதேசத்தில் இருக்கிறது என்றும் கேள்விப்பட்டேன் . அதை பற்றி செய்தி தெரிந்தவர்கள் பதிவிடலாம் ..
மொத்தத்தில் ராஜேந்திரன், ஆதித்ய சோழன், கரிகாலன் சோழன் வழி வந்தரேனாட்டு சோழர்கள் , உத்தம சோழர் என்று அனைவரும் ஆண்டதும் மாண்டதும் , அவர்கள் சமாதி இருப்பதும் இன்றைய வன்னியர் பகுதியான வட தமிழ்நாடு என்று நினைக்கையில் கொஞ்சும் பெருமைதான் . ராஜ ராஜனும் சமாதியும் படையாட்சிகள் அதிகம் வசிக்கும் ‘கும்பகோணம் பட்டீஸ்வரம் பக்கம் இருக்கிற உடையாளூர் என்ற ஊரில்தான் ராஜராஜ சோழன் அடக்கம் செய்யப்பட்ட இடம் இருக்கிறது’.. இதை பராமரிப்பவர் பக்கிரிசாமி படையாட்சி என்னும் ஏழை விவசாயி ...............


மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய குடைவரை கோவில்

இது தான் சென்னை ஜமீன் பல்லாவரத்தில் இருக்கின்ற மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய குடைவரை கோவில் . 
 இந்த குடைவரையில் தனது விருதுபெயர்களை பொறித்துள்ளார் மகேந்திரவர்மன். தற்போது இது ஒரு இசுலாம் வழிப்பாட்டு தலமாக மாறியுள்ளது. இங்கு ஒரு முசுலீம் பெரியவர் வந்து தங்கி இங்கேயே அடக்கம் ஆகியுள்ளார். அதனால் இது ஒரு தர்காவாக மாற்றட்டப்பட்டுள்ளது. தற்போது இதை சுற்றி பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை. 
இங்கு உள்ள குடைவரை மொசைக் ஒட்டப்பட்டு கல்வெட்டுக்கள் எல்லாம் மறைந்து விட்டது. தொல்பொருள் துறையினரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். 
என்ன செய்வது ஒரு வன்னியனின் வரலாற்று நினைவு நம் கண் முன்னே நம்மை விட்டு மறைகிறது. 50 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்டது இந்த புகைப்படம்.
 செய்தியை அளித்த திரு பாபு நாயக்கர் அவர்களுக்கு நன்றி

Friday, September 7, 2012

முத்தரையர் மற்றும் வன்னியர்களின் நல்லுறவு

பல்லவர் பேரரசு இருந்த காலத்தில் , அவர்களின் கீழ் குறுநில மன்னர்களாகவும், உறுதுணையாளர்களாகவும் விளங்கியவர்கள் முத்தரைய மன்னர்கள்.... 
அதனால் வன்னியர்-முத்தரையர் இடையே நல்லுறவு இருந்திருந்தது ...... 
வன்னியர்களுடன் மிக நெருங்கிய உறவுள்ளவர்கள் முத்தரையர் மற்றும் உடையார்கள் .... 
வேலூர் மாவட்டங்களில் சில இடத்தில் முத்தரையர்கள் தங்களை வன்னிய நாயக்கர் என்று அழைக்கும் பழக்கமும் உண்டு ... 
முத்தரையரில் உட்ப்பிரிவாக உள்ள பட்டங்களில் "வன்னியர் குல சத்திரிய முத்தரையர்" என்பதும் உண்டு ..
நண்பர் திரு. Bodhi Varma "முத்தரையர் மற்றும் வன்னியர்களின் நல்லுறவு" பற்றி முத்தரையர்களின் நூலில் இருந்து எடுத்த செய்தி இங்கே :
 

Sunday, August 26, 2012

காடவராயர் கோப்பெருஞ்சிங்கனை பள்ளி(வன்னியர் ) என்று குறிக்கும் கல்வெட்டு :

உலகத் தமிழ்ச் சங்கத் தலைவரும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளருமான நொபுரு கரஷிமா அவர்களின் "South Indian
Society in Transition: Ancient to Medieval"
ஆய்வு நூலில் கல்வெட்டு
ஆதாரங்களுடன் "காடவராயர்கள் வன்னியர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


குறிப்பாக திருமுட்டம் மற்றும் விருதாச்சலம் கல்வெட்டுகள் காடவராயர்கள் வன்னியர்களே (பள்ளி) என்று குறிப்பிடுகின்றன.


கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த கோப்பெருஞ்சிங்க காடவராயன் மூன்றாம் ராஜராஜ சோழனையே கைது செய்து சேந்தமங்களத்தில் சிறைவைத்தான். (சிதம்பரம் கோவிலின் தெற்கு கோபுரத்தையும், தில்லை காளியம்மன் கோவிலையும் கட்டியவன்
இவன்தான்.)

மற்றொரு காடவராய தலைவனான குலோத்துங்கசோழ காடவராயனின்
தம்பி குலோத்துங்கசோழ கச்சியராயன் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுவதையும் நொபுரு கரஷிமா குறிப்பிடுகிறார். இப்போதும் கடலூர் நடுத்திட்டு, தியாகவல்லி பகுதி வன்னியர்கள் கச்சியராயர்கள் என்று
அழைக்கப்படுகின்றனர்.

From “South Indian Society in Transition: Ancient to Medieval", by Noboru Karashima, OXFORD 2009

Page 74


In a Shrimushnam inscription (ARE 1916 – 232) Kulottungachola Kadavarayan, a Kadava chief, is stated as a Palli.


Pages 137 & 139Kopperunjinga, one of the Kadava chiefs of the thirteenth century, is
famous for having taken captive his own master, Rajaraja III of the
Cholas, for some time in Sendamangalam in South Arcot District.


A Tiruvadi inscription (SII, vii – 319; SA, 1145) records that
Araisanarayan alias Kulottungachola Kachchiyarayan, a Kadava chief…


Another Tiruvadi inscription (SII, vii – 320; SA, 1146) records the
remission by Elisaimahan alias Kulottungachola Kadavarayan, probably an
elder brother of Araisanarayan of previous inscription…

We have
three more inscriptions of this chief, which are found in Vriddhachalam
(SII, vii – 150; SA, 11468), Srimushnam (ARE 1916 – 232, SA, 1152), and
Tirunarunkondai (SITS – 74; SA, 1156). In the first two he is described
as a Palli who has kani right in Erumbur.

கோப்பெருஞ்சிங்க காடவராயன் வன்னியன் என வெளிப்படையாக தெரிந்த காரணத்தினாலேயே அவனது புகழ் மறைக்கப்பட்டுவிட்டது.

காடவராயர் கோப்பெருஞ்சிங்கனை பள்ளி(வன்னியர் ) என்று குறிக்கும் கல்வெட்டு :உலகத் தமிழ்ச் சங்கத் தலைவரும் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளருமான நொபுரு கரஷிமா அவர்களின் "South Indian
Society in Transition: Ancient to Medieval" ஆய்வு நூலில் கல்வெட்டு
ஆதாரங்களுடன் "காடவராயர்கள் வன்னியர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது


குறிப்பாக திருமுட்டம் மற்றும் விருதாச்சலம் கல்வெட்டுகள் காடவராயர்கள் வன்னியர்களே (பள்ளி) என்று குறிப்பிடுகின்றன.


கடலூரைத் தலைமையிடமாகக் கொண்டிருந்த கோப்பெருஞ்சிங்க காடவராயன் மூன்றாம்  ராஜராஜ சோழனையே கைது செய்து சேந்தமங்களத்தில் சிறைவைத்தான். (சிதம்பரம்  கோவிலின் தெற்கு கோபுரத்தையும், தில்லை காளியம்மன் கோவிலையும் கட்டியவன்
இவன்தான்.)

மற்றொரு காடவராய தலைவனான குலோத்துங்கசோழ காடவராயனின்
தம்பி குலோத்துங்கசோழ கச்சியராயன் என்று அழைக்கப்பட்டதாக கல்வெட்டு கூறுவதையும் நொபுரு கரஷிமா குறிப்பிடுகிறார். இப்போதும் கடலூர்  நடுத்திட்டு, தியாகவல்லி பகுதி வன்னியர்கள் கச்சியராயர்கள் என்று
அழைக்கப்படுகின்றனர்.

From “South Indian Society in Transition: Ancient to Medieval", by Noboru Karashima, OXFORD 2009

Page 74

In a Shrimushnam inscription (ARE 1916 – 232) Kulottungachola Kadavarayan, a Kadava chief, is stated as a Palli.

Pages 137 & 139


Kopperunjinga, one of the Kadava chiefs of the thirteenth century, is
famous for having taken captive his own master, Rajaraja III of the
Cholas, for some time in Sendamangalam in South Arcot District.


A Tiruvadi inscription (SII, vii – 319; SA, 1145) records that
Araisanarayan alias Kulottungachola Kachchiyarayan, a Kadava chief…


Another Tiruvadi inscription (SII, vii – 320; SA, 1146) records the
remission by Elisaimahan alias Kulottungachola Kadavarayan, probably an
elder brother of Araisanarayan of previous inscription…

We have
three more inscriptions of this chief, which are found in Vriddhachalam
(SII, vii – 150; SA, 11468), Srimushnam (ARE 1916 – 232, SA, 1152), and
Tirunarunkondai (SITS – 74; SA, 1156). In the first two he is described
as a Palli who has kani right in Erumbur.


கோப்பெருஞ்சிங்க காடவராயன் வன்னியன் என வெளிப்படையாக தெரிந்த காரணத்தினாலேயே அவனது புகழ் மறைக்கப்பட்டுவிட்டது.

Saturday, August 25, 2012

காடுவெட்டி:


தமிழகத்தில் ஆதியில் குடியேறிய பல்லவர்கள் காடு கொன்று நாடாக்கினார்கள். பிறகு பல்லவர்கள் பரம்பரையை விளக்கம் செய்த புகழ்பெற்ற வேந்தர்கள் மிகப் பெரிய ஏரிகளைக் கட்டியும், ஆற்றுக்கால்கள் கோலியும் உழவுக்குப் பெரிதும் வளமூட்டி வந்தனர். காடுகளை வெட்டி நாடாக்கினராகையால் பல்லவர்களுக்குக் காடுவெட்டி என்ற விருது ஒன்றும் உண்டு.

சில ஊர்களின் பெயர்களில் அவ் விருது சேர்ந்திருப்பதை இன்றும

் காணலாம். ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கார்வேட்டி நகரம் காடுவெட்டி நகரம் என்பதன் மரூஉவேயாகுமெனத் தோன்றுகின்றது.

சென்னைக்குப் பன்னிரண்டு கல் தொலைவில் ‘காடுவெட்டி’ என்ற பெயருள்ள சிற்றூர் ஒன்றும் உண்டு. அரியலூர் பகுதியிலும் நமது வன்னியர் சங்க தலைவர் குரு அண்ணன் ஊரான காடுவெட்டி என்னும் ஊரும் உண்டு.

பல்லவர் வாரிசு என்று தமிழக அரசால் சொல்ல பட்ட
"வன்னியர்களின் உடையார்பாளையம் சமஸ்த்தான அரசர்களும் " காடுவெட்டிகள் என்றே அழைக்க படுகிறார்கள் இன்றும்

Thursday, August 23, 2012

நாயக்கர் (நாயகர் ) என்னும் சொல் எந்த மொழி சார்ந்தது

பொதுவாக நாயகர் என்றாலே அவர்கள் தெலுங்கர்கள் என்று சிலர் முட்டாள்தனமாக முடிவு செய்து கொள்கிறார்கள் .

அப்படிபார்த்தால் விநாயகர் என்கிறோம் . வெற்றி தரும் தலைவன் தான் விநாயகன் .. அவரும் நாயகர் என்று அழைக்கடுகிராரே . அப்படியெனில் அவர் சொந்த ஊரும் ஆந்திராவா ?

நாயகர் என்னும் வார்த்தை தலைவன் என்னும் பொருளுடையது . தமிழகத்தை பொறுத்த வரையில் பல இன குழுக்கள் ஒரே பட்டங்கள் கொண்டிருக்கும் . ஒரு இனத்தின் தலைவன் , ஒரு பகுதியின் தலைவன், ஒரு படையின் தலைவன் என்று இருப்போருக்கு "நாயகர் ,கௌண்டர் ,தேவர்" என்பது போன்ற இன்னும் பல பட்டங்கள் தருவது வழக்கம் .

விஜயநகர மன்னர்கள் தமிழகத்தில் நுழைவதற்கு முன்பே ராஜ ராஜன் அப்பன் சுந்தர சோழன் காலத்திலே கூட வடக்கு திசை படை தலைவனகாவும் , வடதமிழ்நாட்டு மன்னராகவும் இருந்த வன்னியர் இனத்தை சேர்ந்த சம்புவராயருக்கு "வடதிசை நாயகர் " என்ற பட்டம் உண்டு . சோழர்களின் மிகப்பெரும் படையான வேளைக்கார படைதான் சோழர் குளத்தில் உள்ள மற்ற படைகளை விட அதிக உரிமை பெற்றவர்கள் . இவர்கள் வந்தாலே , மற்ற படை வீரர்கள் ஒதுங்கி கொள்ள வேண்டும் . மன்னரின் நேரடி பாதுகாவலர்கள் இவர்களே . இவர்களின் தலைவனும் "வன்னிய நாயன் (அ) வன்னிய நாயகன் " என்று அழைப்பட்டார் . திருகொவிலூரை ஆண்ட " "சேதிராயர் " பட்டம் கொண்ட மலையமான்களுக்கும் "வன்னிய நாயன் " என்ற பட்டம் உண்டு . இப்படி நாயகர் என்னும் சொல் தலைவனை குறிக்கும் சொல்லாக பல நூற்றாண்டாக ஆயிரம் வருடத்திற்கு மேல் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

தமிழகத்தில் பீ.டி.லீ .செங்கல்வராய நாயக்கர் , ஆதிகேசவ நாயக்கர் போன்றோர் தமிழ் சாதியான வன்னியர்கள் ... அதோடு சென்னை , காஞ்சி ,வேலூர் போன்ற வட ஆர்க்காடு மாவட்டங்களில் அனைத்திலும் வன்னியர் என்றால் அவர்கள் உடனே "ஓஹோ நாயக்கரா நீங்க " ன்னு கேப்பார்கள் .. நான் படிச்ச காஞ்சியில் படையாட்சி என்ற போது, இதேதான் சொன்னார்கள் ... அட நாயக்கர்னு சொல்லுங்கன்னு சொன்னாங்க. வன்னியர் என்ற சாதி இருந்தும் , பொது பட்டங்களை வைத்துதான் அவர்கள் அழைக்க படுகிறார்கள் . இது போன்ற நாயக்கர் பட்டம் இன்னும் சில சாதிக்கும் உண்டு .. வன்னியர்கள் பெரும்பான்மையாக இருக்கும் வடதமிழகத்தில் தெலுங்கை தாய் மொழியாக கொண்டவர்களும் "நாயுடு " என்றுதான் அழைக்கத் படுகிறார்களே தவிர , நாயக்கார் என்றல்ல ...

சென்னையில் இருக்கின்ற பல நாயக்கர் பேரில் இருக்கின்ற தெருக்கள் எல்லாம் தமிழை தாய்மொழியாக கொண்டவர்களுடையது.. எ.கா.அங்கமுத்து நாயக்கன் தெரு, கோவிந்தப்பன் நாயக்கன் தெரு, ராமா நாயக்கன் தெரு, வீரமுத்து நாயக்கன் தெரு.

அது மட்டும் அல்ல தமிழை தாய்மொழியாக நாயக்கர் சாதி சான்றிதமிழிலும் பள்ளி சான்றிதழிலும் Hindu, Naicker, அதாவது இந்து நாயக்கர் என்றே உள்ளது. இந்த நாயக்கர் எல்லாம் தெலுங்கு நாயக்கர்கள் அல்ல, தமிழை தாய் மொழியாக கொண்ட வன்னிய நாயக்கர்கள்.

நாயக்கர் பட்டம் கொண்ட வன்னியர் குடும்பங்களில் "நாயக்கர்" மற்றும் "நாயகர்" என்று தான் பத்திரங்களில் இருக்கும். நாயக்கர் மற்றும் நாயகர் இரண்டும் ஒரே பொருளை தருவதால் எப்படி போட்டாலும் தவறில்லை. 1978 ஆம் ஆண்டு வரையில் சாதி சான்றிதழ்களில் கூட "இந்து நாயக்கர்" என்று     தான் இருக்கும். வன்னியர் என்று கூட இருக்காது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் நீங்க நாயக்கரா? நாயுடுவா? என்று தான் கேட்பார்கள்.

 எங்களுக்கு தெரிந்த நாயுடு சமூகத்தவர்கள் எங்களை நாயக்கரே என்று தான் அழைப்பார்கள். நாங்க அவர்களை நாயுடு என்று தான் அழைப்போம்.

நாயகர் என்றால் இறைவன், தலைவன், மன்னன் என்று பொருள். அதன் பொருட்டே விநாயகர் இறைவனுக்கெல்லாம் இறைவன் என்கிற பொருளில் முதல் இறைவன் என்கிற பொருளில் "வி" நாயகர் என்று அழைக்கபடுகிறார். "வி" என்றால் முதல் முதன்மை என்று பொருள்.  நாயக்கர் என்பது தமிழும் அல்ல தெலுங்கும் அல்ல. அது ஒரு தூய வடசொல், அதாவது சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தில் naayaka என்றால் தலைவன் என்றே பொருள். நாயகர்(naayakar ) என்றாலும் நாயக்கர்(nayagar) என்றாலும் அது வடமொழி சொல் தான். இது சம்ஸ்கிருத சொல். இதற்கு சமமான தமிழ் சொற்கள் தான் இறைவன், தலைவன், மன்னன் என்பது..

ஆகவே ஒரு பட்டத்தை இனி யாராவது குறித்தால் அவர்கள் இன்னவர்தான் என்பதை ஆராயமால் முடிவு செய்ய வேண்டாம் ... இது வடதமிழ்நாட்டவர்களுக்கு பலருக்கு இது நன்றாக தெரியும் . தெற்கே வாழும் நண்பர்களுக்கு இதை பற்றி தெரிய வாய்ப்பில்லை என்றால் தெரிந்து கொள்ளவும்    

சென்னை நகரத்தின் வேர் தெலுங்கா? தமிழா? - சென்னை தினத்தில் ஒரு சர்ச்சை!
 
ஆகஸ்ட் 22 ஆம் நாள் சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1639 ஆம் ஆண்டில் இதே நாளில்தான் சென்னை நகரம் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்கள் எஸ். முத்தையா எழுதிய "சென்னை மறுகண்டுபிடிப்பு", நரசய்யா எழுதிய "மதராசப்பட்டினம்" ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சென்னை நகரின் வேர் தெலுங்கா?"சென்னை மறுகண்டுபிடிப்பு" நூலில் "சென்னை நகரின் வேர் தெலுங்கு" எனும் சர்ச்சைக்குரிய தகவல் இருக்கிறது

"கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த ஆண்ட்ரூ கோகனும் ஃபிராசிஸ் டேயும் வெங்கடப்பா, ஐயப்பா என்ற வந்தவாசியில் இருந்த உள்ளூர் நாயக்குகள் பூந்தமல்லியில் அளித்த நிலத்தை நன்றியுடன் ஏற்றுக்கொண்டனர். பிற்காலத்தில் சோழமண்டலக் கடற்கரையில் பிரிட்டிஷ் ஆட்சிபீடமாக வளர்ந்த ஒரு நிறுவனத்தை அந்த இடத்தில் அமைத்தனர். சென்னையின் கதை இங்கே ஆரம்பிக்கிறது" என்று அவர் குறிப்பிடுகிறார்.

கூடவே "ஆங்கிலேயர்களுக்கு சென்னைப் பகுதியை அளித்த சந்திரகிரி ராஜாவின் உள்ளூர் நாயக்குகளான தாமர்ல சகோதரர்கள், சென்னப்ப நாயக் என்ற தங்களது தந்தையின்  ஞாபகார்த்தமாக அந்தக்குடியிருப்புக்கு சென்னப்பட்னம் என்று பெயர் வைக்க வேண்டும் என்று விரும்பினர்" என்று பெயர்க் காரணத்தைக் குறிப்பிடும் எஸ். முத்தையா, அதன் தொடர்ச்சியாக "நகரின் வேர் தெலுங்காக இருந்தாலும், தனித்தமிழ் விசுவாசிகள் இந்தப்பகுதியை சென்னை என்று அழைக்கத் தொடங்கினர்" என்கிறார். (பக்கம் 14)

இதே போன்று, ஆந்திர பிரதேசம் தோன்றியது குறித்த வீக்கிபீடியா கட்டுரையில், "வரலாற்று ரீதியிலும் புவியியல் ரீதியிலும் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி. ஆங்கிலேயர்கள் இங்கே தொழிற்சாலை அமைக்க 1639 இல் அனுமதி கேட்டது, இப்பகுதியை ஆட்சி செய்த வெலமா சாதியைச் சேர்ந்த தாமர்ல வெங்கடாத்ரி நாயகுடுவிடம்தான். 1920 ஆம் ஆண்டுக்கு பின்பு சென்னை மாகானத்திலும் தேசிய அரசிலும் தமிழர்களின் ஆதிக்கம் அதிகரித்ததன் விளைவாகவே சென்னை தமிழ்நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது" ன்று கூறப்பட்டுள்ளது.
மெட்ராஸ் மேட்டர்ஸ் எனும் நூல் சென்னை ஆந்திராவின் ஒரு பகுதி என்கிறது. "1998 ஆம் ஆண்டில் மெட்ராஸ் எனும் பெயரை சென்னை என்று மாற்றும் போது 'சென்னை' என்பதன் மூலம் தமிழ் அல்ல என்பதற்கான ஆதாரங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த தெலுங்கு பேசும் சென்னப்ப நாயக்கர் எனும் சந்திரகிரி அரசரின் தளபதி ஆங்கிலேயருக்கு அதனை அளித்ததால்தான் அவரது பெயரில் சென்னை நகரம் அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளனர்.
நரசய்யாவின் மதராசப்பட்டினம் நூலில் "தாமர்ல வெங்கடாத்ரி வம்சத்தினர் காளஹஸ்தி ராஜாக்கள் என்றழைக்கப்படுகின்றனர். அவ்வம்சத்தில், ஐந்தாவதாக வந்தவர் தாமரல குமார சின்னப்ப நாயுடு என்பவர். இவர் பெயரில்தான் சென்னக்குப்பம் என்ற ஒரு இடம் இருந்ததாகவும் அறிகிறோம். இந்தப் பெயர்தான் சென்னை என்ற பெயரின் ஆரம்பமும் ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது (பக்கம் 33).

ஆக மொத்தத்தில், வெங்கடப்பா நாயக்கர் என்பவர் ஃப்ரான்சிஸ் டேயிடம் சென்னையை அளித்ததாலும், அவரின் தந்தைப் பெயரே "சென்னப்ப நாயக்கர்" என்பதாலும் - அவர்கள் தெலுங்கு நாயுடு அல்லது வெலமா சாதியினர் என்கிற கருத்தில் - "சென்னை நகரின் வேர் தெலுங்கு" என்றும், "சென்னை ஆந்திராவின் பகுதி" என்றும் இப்போதும் பேசப்படுகிறது. இந்தத் தகவல் உண்மை அல்ல. 
==========

சென்னை என்ற பெயருக்கு காரணமானவர்கள் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல. சென்னப்ப நாயக்கர் ஒரு தமிழரே! சோழர்கள், பல்லவர்கள், காடவராயர்கள், கடைசியாக தாமல் நாயக்கர்கள் என வரலாற்றின் பெரும்பாலான காலம் தமிழர்களாலேயே சென்னைப்பகுதி ஆளப்பட்டு வந்தது. இந்த வரலாற்றை மாற்றி, சென்னை தெலுங்குப் பகுதி என பொய்யாகக் கட்டமைக்கின்றனர். அதற்கு 'சென்னை' பெயரைப் பயன்படுத்துகின்றனர்.

சென்னையை ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்தது எப்படி?

ஆங்கிலேயெ கிழக்கிந்தியக் கம்பெனிக்கு தென் இந்தியாவில் தொழிற்சாலை என்கிற பெயரில், மசூலிப்பட்டனத்தில் குடியிருப்பை அமைத்துக்கொள்ள 1611 ஆம் ஆண்டு கோல்கொண்டா முகலாய அரசர்கள் அனுமதி அளித்தனர். அதன் தொடர்ச்சியாக 1626 ஆம் ஆண்டு பழவேற்காட்டிற்கு 35 மைல் வடக்கே துர்கராயப்பட்டினத்தில் வேறொரு குடியிருப்பை அமைத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு அந்த இடம் ஒத்துவராததால் வேறொரு இடத்தை தேடினர்.

1636 ஆம் ஆண்டு ஃபிரான்சிஸ் டே என்பவரிடம் புதிய இடத்தை தேடும் பொறுப்பு அளிக்கப்பட்டது. மசூலிப்பட்டனத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையே கடலோரமாக இடம் தேடி அலைந்த அவர் மதராசக்குப்பம் எனும் இடத்தை தேர்ந்தெடுத்தார். அப்போது இந்தப் பகுதியை ஆட்சி செய்தவர்தான் தாமல் வெங்கடப்பா நாயக்கர். அவரது தந்தை சென்னப்ப நாயக்கர். 

சென்னப்ப நாயக்கரின் உண்மை பின்னணி என்ன?

தாமல் நாயக்கர்கள் என்போர் தமிழ்நாட்டில் தற்போது காஞ்சிபுரத்துக்கும் ராணிப்பேட்டைக்கும் இடையே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தாமல் எனும் ஊரை பூர்வீகமாகக் கொண்டவர்கள். இந்த ஊர் பல்லவர் காலத்தில் தாமர் கோட்டம் என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள தாமல் ஏரி பல்லவர்கள் காலத்தில் வெட்டப்பட்டது.

"தாமல், பழமையும் பெருமையும் வாய்ந்த காஞ்சி மாநகரத்தின் அரணாக விளங்கியுள்ளது. ஏனெனில், இது வடக்கு மற்றும் மேற்குப்புறத்திலிருந்து வரும் அரசர்களின் படையை காஞ்சி செல்லும் முன் எதிர்கொள்ளும் ஓர் போர்க்களமாக இருந்துள்ளது...இங்கு வன்னியர் (அல்லது நாயக்கர்) குலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக வசிக்கின்றனர்....

தாமலில் அதிகளவு காணப்படும் இனமான நாயக்கர், விஜயநகரப் பேரரசு ஆட்சியில் சிறந்த போர் வீரர்களாக விளங்கியுள்ளனர். இவர்களே காஞ்சிக்கு எதிரான படையெடுப்புகளை தாமலில் முறியடித்து காஞ்சியைக் காத்துள்ளனர் என்றால் அது மிகையாகாது. இவர்கள் விஜயநகர ஆட்சிக்காலத்தில் போர் வீரர்களாகவும், படைத்தலைவர்களாகவும், ளுனர்களாகவும் மற்றும் நாயக்க அரசர்களாகவும் இருந்துள்ளனர்" என்று குறிப்பிடுகிறது சென்னை சி.பி.ராமசாமி அய்யர் பவுண்டேசனின் வெளியீடான "வரகீசுவரர் கோவில்" எனும் தாமல் வரலாற்று நூல். இந்தநூலை எழுதியவர் சி.பி.ராமசாமி அய்யரின் வாரிசான முனைவர் நந்திதா கிருஷ்ணா.

தாமல் கிராமத்தில் இப்போதும் வன்னிய நாயக்கர்களே மிகப் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.

விஜயநகரப் பேரசின் வழிவந்தவர்களான சந்தரகிரி அரசர் இரண்டாம் வெங்கட்டாவின் ஆட்சிக்காலத்தில் அவரது தலைசிறந்த தளபதியாக விளங்கியவர் தாமல் சென்னப்ப நாயக்கர். அதன் காரணமாகவே அவர் விஜயநகர அரசின் கீழ் சிற்றரசர் நிலைக்கு உயர்ந்துள்ளார். சென்னப்ப நாயக்கரின் புகழைப் போற்றும் வகையில் தூசி மாமண்டூரில் சென்னசாகரம் எனும் ஏரி வெட்டப்பட்டது. அவரது பெயராலேயே சென்னக்குப்பம் எனும் ஊரும் அமைக்கப்பட்டது. அவருக்குப்பின்னர் அவரது மகன் வெங்கடப்ப நாயக்கர் சிற்றரசர் அல்லது ஆளுனராக இருந்துள்ளார். அவரை பாளையக்காரர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஆங்கிலேயர்கள் சென்னை நகரில் தமது நிறுவனத்தை அமைக்க முயன்றபோது தாமல் வெங்கடப்ப நாயக்கர் வந்தவாசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தார். அவருக்கு கீழே தாமல் அய்யப்ப நாயக்கர் பூந்தமல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தனர் (இந்த அய்யப்ப நாயக்கர் பெயரால் அமைந்த ஊர்தான் அய்யப்பன் தாங்கல்). இவர்களிடம் 15000 வீரர்களைக் கொண்ட பெரும் போர்வீரர் படை இருந்துள்ளது. எனவே, சந்தரகிரி அரசரிடம் மிகுந்த ஆதிக்கம் செலுத்துபவராக இவர்கள் இருந்துள்ளனர்.
பழவேற்காட்டுக்கும் சாந்தோமுக்கும் இடையிலான கடற்கரை இவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களிடம் தான் ஆங்கிலேயர்கள் அனுமதி பெற்று தமது நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். உண்மையான  சென்னையின் கதை இங்கேதான் ஆரம்பிக்கிறது (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800,  By Henry Davidson Love 1852)

"ஒருகட்டத்தில் தாமல் நாயக்கர்கள் விஜயநகர அரசரை எதிர்க்கும் அளவிற்கும் சென்றுள்ளனர். 1642 ஆம் ஆண்டில் விஜயநகர அரசுப்பொறுப்பை ஏற்ற விஜயநரத்தின் கடைசி அரசரான சிறீரங்க ராயரை தாமல் வெங்கடப்ப நாயக்கர் ஏற்கவில்லை. இதனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரை பதவி நீக்கம் செய்து சிறையில் அடைத்தார் சிறீரங்க ராயர். ஆனால், தாமல் வெங்கடப்ப நாயக்கரின் தம்பியும் அவரது உறவினர்களும் நெருக்குதல் கொடுத்ததன் காரணமாக அவரை விடுதலை செய்து மீண்டும் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்தார் சிறீரங்க ராயர்" என்கிறது தஞ்சை நாயக்கர்கள் எனும் வரலாற்று நூல் (Nayaks of Tanjore, By V. Vriddhagirisan 1942)

தமிழ் வன்னிய நாயக்கர்கள் தெலுங்கு நாயுடுகளாக ஆனது எப்படி?

விஜயநகர அரசர்களின் கீழ் வடதமிழ்நாட்டின் எல்லைப்பகுதியில் இரண்டு சிற்றரசுகள் இருந்துள்ளன. ஒன்று தாமல் வெங்கடப்பா நாயக்கர், மற்றது காளஹஸ்தி வெலுகோட்டி திம்ம நாயக்கர். இந்த இரண்டு தனித்தனி சிற்றரசுகளும் பல ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றனர்.

சஞ்சை சுப்ரமணியம் என்பவர், '1600 களின் தொடக்கத்தில் விஜய நகர அரசரான வேங்கடப்பட்டி ராயருக்கும் செஞ்சி அரசரான முட்டு கிருஷ்ணப்ப ராயருக்கும் இடையேயான போரில் தாமல் மற்றும் வெலுகோட்டி சந்ததியினரின் துணைகொண்டு விஜய நகர அரசர் வெற்றிபெற்றதாக' குறிப்பிடுகிறார். (The Political Economy of Commerce: Southern India 1500-1650
 By Sanjay Subrahmanyam 1990)

அதே சஞ்சை சுப்ரமணியம் '1642 இல் நடந்த தண்டலூரு போரில் விஜய நகர அரசரான வெங்கட்டாவுடன் அவரது இரண்டு தளபதிகளான தாமல் வெங்கடப்பா நாயக்கரும் வெலுகோட்டி திம்ம நாயக்கரும் கோல்கொண்டா சுல்தானின் படையிடம் தோல்வியடைந்ததாக' குறிப்பிடுகிறார். (Penumbral Visions: Making Polities in Early Modern South India,  By Sanjay Subrahmanyam 2001)

அதே போன்று கனகலதா முகுந்த் எனும் வரலாற்று ஆய்வாளர், '1635 வாக்கில் வெலுகோட்டி குடும்பம், தாமல் குடும்பம் போன்ற தனிப்பட்ட குடும்பத்தினர் பெரும் அரசியல் சக்திகளாக மாறினர்' என்கிறார். (The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel,  By Kanakalatha Mukund 1999)

இப்படியாக, சந்தரகிரி அரசரின் கீழ் தாமல் வன்னிய நாயக்கர் பரம்பரையினர் மற்றும் காளஹஸ்தி வெலுகோட்டி பரம்பரையினர் என இரண்டு தனித்தனி பரம்பரையினர் இருந்துள்ளனர்.

இதனிடையே '1614 - 16 ஆம் ஆண்டுகளில் தமிழ் மற்றும் தெலுங்கு பகுதிகளில் நடந்த குழப்பமான போரின் போது தாமல் பரம்பரையை சேர்ந்தவர்கள் காளஹஸ்தியை பிடித்ததாகவும், அவர்கள் தொடர்ந்து காளஹஸ்தி ஜமீந்தார்களாக அங்கே ஆட்சி செய்வதாகவும்' ஒரு தகவல் 1938 ஆம் ஆண்டின் நெல்லூர் மாவட்ட கெசட்டீயரில் குறிப்பிடப்பட்டுள்ளது. (Gazetteer of the Nellore District: Brought Upto 1938,  By Government Of Madras Staff, Government of Madras 1942) (அதாவது, காளகஸ்தியைத்தான் தாமல் பரம்பரையினர் பிடித்தனர் என்று பிற்காலத்தில் கூறப்பட்டுள்ளது. மாறாக காளகஸ்தியிலிருந்து எவரும் வந்து தாமலைப் பிடிக்கவில்லை).

ஆக, காஞ்சிபுரம் அருகில் உள்ள தாமல் ஊரைச் சேர்ந்த சிற்றரசர்கள் வன்னிய நாயக்கர்கள். அவர்களது பெயரில்தான் சென்னை அமைந்துள்ளது.

'1756 ஆம் ஆண்டு சென்னை சைனா பசார் எனும் இடத்தில் கட்டப்பட்ட புதிய நகரக் கோவில் எனும் கோவிலுக்காக தாமல் மரபில் வந்த காளஹஸ்தி ராஜாவின் சார்பில் 100 பகோடாக்கள் அளிக்கப்பட்டதாக' சென்னையின் முந்நூறாவது ஆண்டுவிழா மலர் 1939 கூறுகிறது. (The Madras Tercentenary Commemoration Volume,  By Madras Tercentenary Celebration Committee, 1939)

ஆங்கிலேயர்களுக்கும் தாமல் வெங்கடப்பா நாயக்கர்களுக்கும் இடையேயான உடன்படிக்கை பற்றி 1852இல் விரிவாகக் குறிப்பிட்டுள்ள ஹென்றி டேவிட்சன் லவ், "தாமல் குடும்பத்தினரை இப்போது காளஹஸ்தி ராஜா பிரதிநிதிதுவப்படுத்துகிறார்" என்று குறிப்பிடுகிறார். (Indian Records Series Vestiges of Old Madras 1640-1800,  By Henry Davidson Love 1852) அதாவது, தாமல் பரம்பரையினர் வலுவிழந்த பின்னர் அவர்களது உரிமைகளை காளஹஸ்தி ராஜா பயன்படுத்தியுள்ளார்.

ஆக, காளஹஸ்தியில் வாழ்ந்த தெலுங்கு வெலமா சாதி வெலுகோட்டி ஜமீந்தார்கள் பிற்காலத்தில் தாமல் மரபினர் என்று கூறப்பட்டுள்ளனர். இந்த பிற்காலத் தகவலை வைத்துக்கொண்டு - தாமல் சிற்றரசர்கள் காலஹஸ்தியைச் சேர்ந்தவர்கள் என்றும், அதனால் அவர்கள் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்றும் வரலாற்றை தலைகீழாக மாற்றியுள்ளனர்.
'வன்னியர்கள் வரலாற்றை தானே மறைக்கின்றனர், நமக்கென்ன?' என்று பொதுவான தமிழ் வரலாற்று ஆய்வாளர்கள் வேடிக்கைப் பார்த்ததால் - தாமல் என்கிற தமிழ் மரபை தெலுங்கு மரபாகத் திரித்து, அதையே 'சென்னப்ப நாயக்கர்' தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் என்று மாற்றி, பின்னர் தெலுங்கு மன்னரின் பேயரில் அமைந்த சென்னை ஆந்திராவில் ஒரு பகுதி என்று பேசுகின்றனர்.

இதே கருத்தில் சென்னை நகரில் புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன. இன்று (22.08.2012) சென்னை தினம் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால், சென்னையை உருவாக்கிய தாமல் ஊரில் அதன் சுவடே தெரியவில்லை!

தமிழ்ச்சாதியினர் புறக்கணிக்கப்பட்டால் தமிழன் புறக்கணிக்கப்படுவான் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
குறிப்பு: தமிழ்நாட்டின் வரலாறு திரிக்கப்படுவதை மறுத்து இப்பதிவு எழுதப்பட்டுள்ளது. மற்றபடி, ஒரு மொழி எனும் அடிப்படையில் தெலுங்கு மொழியும் ஒரு சிறப்பான மொழி என்றே நான் கருதுகிறேன். அவ்வாறே, தமிழ்நாட்டில் ஒரு அங்கமாகிவிட்ட தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டவர்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும்.தெலுங்கு மொழியையோ அந்த மொழி பேசும் மக்களையோ அல்லது ஆந்திர பிரதேசத்தையோ நான் குற்றம் சாட்டவில்லை. 

ஆதாரம்:


1. Varahishwarar Temple – Damal, CPR Publications, by Dr. Nanditha Krishna 2001.

2. Madras rediscovered, by S Muthiah2009.

3. Madrasapattinam, by Narasiah 2006.

4. Madras Matters – At home in South India, by Jim Brayley-Hodgetts 2008.

5. Indian Records Series Vestiges of Old Madras 1640-1800, by Henry Davidson Love 1852.

6. Gazetteer of the Nellore District: Brought Upto 1938, By Government Of Madras Staff, Government of Madras 1942.

7. The Madras Tercentenary Commemoration Volume, by Madras Tercentenary Celebration Committee, 1939.

8. Penumbral Visions: Making Polities in Early Modern South India, by Sanjay Subrahmanyam 2001.

9. The Trading World of the Tamil Merchant: Evolution of Merchant Capitalism in the Coromandel, by Kanakalatha Mukund 1999.

10. Nayaks of Tanjore, by V. Vriddhagirisan 1942.

 11. The Political Economy of Commerce: Southern India 1500-1650, By Sanjay Subrahmanyam 1990.


 செய்தியை அளித்த திரு .அருள் ரத்தினம் அவர்களுக்கு நன்றி

Source : http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_6700.html

பல்லவர் சமணப்பள்ளிகளை இடித்து சிவன் கோவிலை எழுப்பியதை சொல்லும் பெரிய புராணம்


பாடல் :
"வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின்கண் கண்ணுதற்குப்
பாடலிபுத்திரத்தில் அமணர் பள்ளியொடு பாழிகளும்
கூடஇடித்துக் கொணர்ந்து குணபரவீச்சர மெடுத்தான்"


என்று பாடுகிறது பெரியபுராணம். 
 
விளக்கம்:
(காடவன் - பல்லவன் மகேந்திர வர்மன்; கண்ணுதல் - சிவபெருமான்.)

பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் சமணப்பள்ளிகளை இடித்துச் சிவனுக்குக் கோயில்கட்டினான் என்னும் செய்தி இதில் இடம்பெற்றுள்ளது.

பல்லவர் காலத்துப் பக்தி இயக்கத்தின் விளைவையே
இதில் குறிப்பிட்டுள்ளார் சேக்கிழார்.

சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில் காடவராயர் அரசரை பாடிய பாடல்

 
பாடல் வரி :
"காடவர் குரிசி லாராங் கழற்பெருஞ் சிங்க னார்தாம் "


விளக்கம் :

காடவர் - சோழர்களின் ஒருபிரிவாகிய மரபு. “காடவர் கோன்” என்பது முதனூல்; 
இம்மரபு பல்லவர்களினின்றும் கிளைத்தது என்பது “பல்லவர்குலத்து வந்தார்” என்றதனால் ஆசிரியர் அறிவித்தமை காண்க. 
இவர்க்கு மும்முடிவேந்தர்களுட் சேர்த்து எண்ணும் பெருமையின்று என்ற குறிப்பினால் இவரைக் குறுநிலமன்னன் ரைவருள் வைத்து வகுத்தனர் திருத்தொண்டர் புராண வரலாற்றின் ஆசிரியர் உமாபதி சிவனார். 
பெருங்கழற் சிங்கனார் என்க. கழலையணிந்த சிங்கம் போன்றார் எனக் காரணப் பெயராய் வந்தமை தெரியக் கழற் பெருஞ் சிங்கனார் என அடைய இடையில் வைத்தார்.

கழல் - அடைமொழி; சிங்கன் பெயர்; போரிற் சிங்கம் போன்றவன்.
சுந்தரர் தம் திருத்தொண்டத்தொகையில் காடவராயர் அரசரை பாடிய பாடலிது
Source:  http://www.tamilvu.org/slet/l4100/l4100uri.jsp?song_no=4102&book_id=120&head_id=7&sub_id=1509 

Saturday, June 30, 2012

பொன்னியம்மன் கோவிலில் உள்ள காடுவெட்டியை குறிக்கும் சிற்பம்
 செய்ததை அளித்த பாபு நாயக்கர் அவர்களுக்கு நன்றி :

காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலிலிருந்து அனுமந்தபுரம்
செல்லும் சாலையில் 5 கி.மீ தொலவில் அமைந்துள்ள கொண்டமங்கலம் கிராமம்.
இக்கிராமத்தின் வடக்கு பகுதியில் வனசூழ்ந்த இடத்தில் அமைந்துள்ள
பொன்னியம்மன் கோவிலில் உள்ள பலித்தூண் சிறுக்கோவில். அம்மனை வழிபடுவதற்கு
முன் இந்த கற்பலகைக்கு தான் முதல் மரியாதை. கற்பலகையில் மரம் வெட்ட
பயன்படும் அரிவாள்(கத்தி) மற்றும் கோடரி ஆகிய உருவங்கள் உள்ளன. கோவில்
வடக்கு பார்த்து உள்ளது. இது முழுக்க முழுக்க வன்னியர்கள்
கட்டுப்பாட்டில் உள்ள கோவில். 4.5.2012 அன்று தான் கும்பாபிசேகம்
நடைபெற்றது.

குறிப்பு:இந்த கற்பலகையை பார்க்கும் போது நாம் காடுவெட்டியர் என்பதை
நினைவு படுத்துவது போல் உள்ளது. இது வனப்பகுதியின் அருகில்
அமைந்திருப்பது கூடுதல்  விசேசம்.

உங்கள் கருத்துக்களை தெரிவுயுங்கள்.
படம் இணைத்துள்ளேன்

பல்லவர் வழித்தோன்றல்களான உடையார் பாளையம் வன்னிய அரசர்களின் வரலாறு.


Wednesday, May 9, 2012

வன்னியர் புகழ் பாடும் , பல்லவ குல வன்னிய கச்சிராயர்கள் கட்டிய கோனான்குப்பம் தேவாலயம்
வாழும் பல்லவ வம்சமான காடவராய கோப்பெருஞ்சிங்கன் சங்கதியினரின் வாரிசான கச்சிராயர் பாளையக்காரர்கள் பற்றிய வீடியோ கோப்பு :

வாழும் பல்லவ வம்சமான காடவராய கோப்பெருஞ்சிங்கன் சங்கதியினரின் வாரிசான கச்சிராயர் பாளையக்காரர்கள் பற்றிய வீடியோ கோப்பு :


Monday, March 19, 2012

வன்னிய குல "உடையார்பாளையம் சமஸ்த்தானத்து அரசர்கள் "


வன்னிய குல "உடையார்பாளையம் சமஸ்த்தானது அரசர்கள்  " - "காலட்கள் தோழ உடையார்" என்ற பட்டமும் மற்றும் "கச்சி " என்னும் காஞ்சி பல்லவ மன்னர்களை குறிக்கும்  அடைமொழியையும் கொண்டு ஆட்சி செய்த வன்னிய மன்னர் பரம்பரையினர் .


உடையார் பாளையம் :

1 எழுதியவர் : டாக்டர் உ.வே.சாமிநாதையர்தட்டச்சியவர் : திருமதி கீதா சாம்பசிவம்
1.1 கோபால சாஸ்திரிகள்
1.2 ராமா சாஸ்திரிகள்
1.3 அறச் செயல்கள்


எழுதியவர் : டாக்டர் உ.வே.சாமிநாதையர்
தட்டச்சியவர் : திருமதி கீதா சாம்பசிவம்
===========================================================


தமிழ்நாட்டில் உள்ள பழைய ஜமீன்களுள் உடையார்பாளையம் ஒன்று. வீரத்திற்கும் தியாகத்திற்கும் கல்விக்கும் பெயர் பெற்ற பல ஜமீன் தார்கள் இதனை ஆண்டு இதற்கு நற்புகழை நாட்டியிருக்கிறார்கள். இதன் அதிபர்களாகிய 'காலாட்கள் தோழ உடையார்கள்' தங்கள் படைகளுடன் தங்கிய இடமாதலின் இதற்கு உடையார் பாளையம் என்னும் பெயருண்டாயிற்று.

தல வரலாறுஇவ்வூருக்குப் பத்ராரணியம், முற்கபுரி முதலிய பல பெயர்கள் உண்டு. இங்கே உள்ள சிவாலயம் மிகப் பழமையானது. ஸ்வாமியின் திருநாமம் வடமொழியில் முற்கபுரீசரெனவும் தமிழில் பயறனிநாதரெனவும் வழங்கும். அம்பிகையின் திருநாமம் நறுமலர்ப்பூங்குழல்நாயகி யென்பது; ஸுகந்தகுந்தளாம்பிகை யென்பது வடமொழி நாமம்.

மலைநாட்டின் கண் திவாகரபுரமென்னும் ஊரிலிருந்த வணிகனொ ருவன் சோழநாட்டிலும் பிறநாட்டிலும் மிளகுப்பொதிகளைப் பல மாடுக ளின் மேல் ஏற்றிக் கொணர்ந்து வியாபாரம் செய்து வந்தான். ஒரு சமயம் இவ்வூர் வழியாக விருத்தாசலத்திற்குப் போனான். அப்பொழுது இவ்வூரில் ஒரு சுங்கச் சாவடி இருந்தது.

மிளகிற்கு வரி அதிகமாக வாங்குவது வழக்கம். அதனை அறிந்த வணிகன் சுங்க அதிகாரிகளிடம் 'பொதிமூட்டையிலிருப்பது பயறு' என்று பொய் கூறி அதற்குரிய சிறிது வரியை மட்டும் கொடுத்துவிட்டுச் சென்றான். விருத்தாசலம் சென்று பொதியை அவிழ்க்கும்போது எல்லாம் பயறாக இருந்தது. அதிக விலைபெற்ற மிளகெல்லாம் குறைந்த விலையுள்ள பயறாக மாறினதனால் வணிகன் வருந்தினான். 'இது நான் பொய் சொன்னதற்காக இறைவன் செய்த தண்டனை போலும்' என்றெண்ணி பழமலைநாதர் முன் போய் முறையிட்டான். அப்போது, "கெட்ட இடத்தில் தேடவேண்டும்" என்று ஓர் அசரீரி வாக்கு உண்டாயிற்று.

உடனே அவ்வணிகன் இந்தத் தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டுப் பிரார்த்தித்தான். இறைவனருளால் பயறெல்லாம் மீண்டும் மிளகாயின. மிளகைப் பயறாகச் செய்த காரணம் பற்றிச் சிவ பிரானுக்குப் பயறணிநாதர் என்னும் திருநாமமும், இவ்வூருக்குப் பயறணீச்சுரம், முற்கபுரி என்னும் திருநாமங்களும் உண்டாயின. இத்தல வரலாற்றை என்னுடைய ஆசிரியராகிய மகாவித்துவான் ஸ்ரீமீனாக்ஷி சுந்தரம் பிள்ளையவர்கள் தாம் இயற்றிய மாயூர புராணத்தில்,

"மன்னன் முதல் வானரெலாம் வந்து தொழ வரங்கொடுத்து
முன்னவனெக் காலுமமர் முற்கபுரம்"
(திருநாட்டு. 58)

எனக் குறிப்பித்திருக்கிறார்கள்.

இத்தலத்திற்குத் தமிழ்ச்செய்யுள் வடிவத்தில் ஒரு புராணமும் அம்பிகை விஷயமாக ஒரு மாலையும் உண்டு.

இங்கே காண்டீப தீர்த்தம் என்ற ஒரு பெரிய தீர்த்தம் இருக்கிறது. அத்தீர்த்தம் அருச்சுனனுடைய காண்டீபத்தால் உண்டாக்கப் பட்டதென்பர்; அருச்சுனனுக்குக் காண்டீபத்தை வளைத்துக் கொடுத்த ருளியமையின் இத்தலத்து விநாயகருக்கு வில் வளைத்த பிள்ளையா ரென்னும் திருநாமம் உண்டாயிற்று. அதற்கு அறிகுறியாக அம்மூர்த்தி யின் திருக்கரத்தில் இப்பொழுதும் ஒரு வில் இருக்கிறது. காண்டீப தீர்த்தத்தின் தென்கரையில் திருவாவடுதுறையாதீனத்திற்குரிய ஒரு மடமும் வடகரையில் தருமபுர ஆதினத்திற்குரிய மடம் ஒன்றும் இருக்கின்றன. இன்னும் பல மடங்கள் இத்தீர்த்தத்தைச் சுற்றி இருந்தி ருக்கவேண்டுமென்று தோற்றுகின்றது.

இவ்வூரில் விஷ்ணுவாலயம் ஒன்று உண்டு; அதில் பிரஸன்ன வேங்க டேசப் பெருமாளென்னும் திருநாமத்துடன் திருமால் எழுந்தருளியிருக் கிறார். பிறநாட்டார் தமிழ்நாட்டுக்கு வந்து போர் புரிந்த 'கலாப' காலத் தில் இங்கே இருந்த ஜமீன்தார்களுடைய பாதுகாவலில் பிற தலங்களி லிருந்த மூர்த்திகள் கொணர்ந்து வைக்கப்பட்டன. அக் காலத்தில் அம்மூர்த்திகள் எழுந்தருளியிருப்பதற்கு அமைக்கப்பட்ட மண்டபங்கள் இன்னும் அவ்வம்மூர்த்திகளின் பெயராலேயே வழங்கி வருகின்றன.

ஜமீன்தார்கள்

இவ்வூரிலுள்ள ஜமீன்தார்கள் கச்சியென்னும் அடைமொழியையுடைய பெயரையும் காலாட்கள் தோழ உடையாரென்னும் பட்டப்பெயரையும் உடையவர்கள். இவர்களுடைய முன்னோர்கள் காஞ்சீபுரத்தில் பாளை யக்காரகளாக இருந்தவர்களாதலின் கச்சி என்னும் அடைமொழி இவர்க ளுடைய பெயர்களுக்கு முன் சேர்த்து வழங்கப்படுகிறது. பல வீரர்களுக் குத் தலைவர்களாகி விஜயநகரத்தரசர்களுக்கும் மற்றவர்களுக்கும் போரில் துணை புரிந்து வந்தவர்களாதலின் "காலாட்கள் தோழ உடையார்" என்னும் பட்டப்பெயர் இவர்களுக்கு ஏற்பட்டது. இது காலாட் களுக்குத் தோழராகிய உடையாரென விரியும். இத்தொடர், "காலாக்கித் தோழ உடையார்" , "காலாக்கி தோழ உடையார்" எனப் பலவாறாக மருவி வழங்கும்.

பள்ளிகொண்ட ரங்கப்ப உடையார்

விஜயநகரத்தில் அரசாட்சி செய்த வீர நரஸிம்ம ராயரென்னும் அரசரு டைய காலத்தில் காஞ்சீபுரத்தில் இருந்து பாளையகாரராகப் பள்ளி கொண்ட ரங்கப்ப உடையாரென்பவர் ஆண்டு வந்தார். விஜய நகரத் தரசரின் ஆளூகைக்குட்பட்ட செஞ்சியில் அப்பொழுது அவ்வரசர் பிரதிநிதியாக ஆண்டு வந்த உதயகிரி, ராமபத்ரநாயக்க ரென்பவருக்குப் பள்ளி கொண்ட ரங்கப்ப உடையார் பலவகையில் உதவி புரிந்தார். வட நாட்டிலிருந்து போர் புரிய வந்த 'பரீத் ஷா' என்னும் மஹம்மதிய அரசரோடு நடந்த போரில் விஜயநகரத்தரசருடைய சார்பில் இருந்து படைத்தலைமை தாங்கி வெற்றி பெற்றார். அதனால் விஜயநகரத்தரசர் மகிழ்ந்து அவருக்குப் பல விருதுகளையும் ஊர்களையும் வழங்கினார். பன்னிரண்டு யானைகளையும், இருநூறு குதிரைகளையும், ஐயாயிரம் போர்வீரர்களையும் அளித்தார். அவர் பெற்ற பட்டங்களில் 'காஞ்சீபுரப் புரவலன்' என்பது ஒன்று. உடையார் பின்னும் பலவகையில் விஜய நகரத்தாருக்கு உதவி செய்து பலவகை ஊதியங்களைப் பெற்றார். காஞ்சீபுரத்தில் தம்முடைய உறவினரொருவரை வைத்துவிட்டுப் புதிதாக அரக்குடி என்னும் ஓரூரை உண்டாக்கி அதில் இருந்து ஆண்டு வந்தார்.

சின்ன நல்லப்ப உடையார்

பள்ளிகொண்ட ரங்கப்ப உடையாருக்குப் பின் அவருடைய மூத்தகுமாரர் பெரிய நல்லப்ப உடையார் பாளையக்காரரானார்; அவருக்குப் பிறகு அவர் தம்பியான சின்ன நல்லப்பக் காலாட்கள் தோழ உடையார் தலை வரானார். அவர் சிதம்பரம் ஸ்ரீநடராஜப்பெருமான் பால் இடையறாத அன்பு பூண்டவர்; பலவகையான தர்மங்கள் புரிந்தவர்; தமிழ் இலக்கண இலக்கியங்களில் நல்ல பயிற்சி உடையவர்; சிதம்பரத்தில் இருந்த குரு நமச்சிவாயரென்னும் பெரியோரிடம் உபதேசம் பெற்றவர். குருநமச் சிவாயருக்கு அவரிடம் பேரருள் இருந்து வந்தது.

(வெண்பா)
எல்லாச் சிறப்பும் இனிதாப் பொருந்துகின்ற
நல்லானெனப் பெயர்கொள் நாயகமே-சல்லாப
இந்திரன் போல் மிக்க செல்வம் இத்தரணிமீதிலுற்றுச்
சந்ததமும் வாழ்குவை நீதான்"

"நல்லானெனச் சொல்லும் நாயகசிரோமணியே!
தில்லைக்கடவுள் திருவருளால்-எல்லவரும்
மெச்ச வளர்செல்வம் மேன்மேலுமேய்டைந்தே
இச்சையுடன் வாழ்ந்துண்டிரு"

"பாவிலருந்தமிழைப் பாராட்டி யெப்பொழுதும்
மேவ சிவபூசை வேளையினும்- தான பிறப்
பில்லாத பொற்சபையில் ஈசனையும் கச்சிவரு
நல்லானையுமறவேன் நான்"


என்ற குருநமச்சிவாயர் பாடல்களால் சின்ன நல்லப்ப உடையருடைய இயல்பும் அவர்பால் குருநமச்சிவாயருக்கு இருந்த அருளும் விளங்கும். சின்ன நல்லப்ப உடையாரும் தம் குருவைப் பாராட்டிய செய்யுட்கள் பல. அவற்றுள் இரண்டு வருமாறு;

(வெண்பா)

1. நன்னூலுங்காரிகையும் நன்றாந்திவாகரமும்
பன்னூலும் ஆராய்ந்து பார்ப்பதேந்முன்னூலும்
கொண்டாடும் தில்லைக்குரு நமச்சிவாயர்முகம்
கண்டாலும் உண்டே கதி."

2. கீதம் பாதங்கிளிருங் கலைஞானம்
வேதம் பரிமளிக்க வீசுமே -கீதக்
கொழுந்திருக்கும் தில்லைக்குரு நமச்சிவாய
தழைந்திருக்குமாத்தானந்தான்."


நடராஜப் பெருமானுடைய திருத்தொண்டில் ஈடுபட்ட சின்ன நல்லப்ப உடையார் அம்மூர்த்தியை மனமுருகித் துதித்த செய்யுட்கள் பல. அவற்றுள் ஒன்று வருமாறு:

(வெண்பா)

அம்பலவா பின்னொருகால் ஆடினாற்றாழ்வாமோ
உம்பரெலாது கண்டதெனக் கொப்பாமே-சம்புவே
வெற்றிப் பதஞ்சலிக்கும் வெம்புவிக்குந் தித்தியென
ஒற்றிப் பதஞ்சலிக்கு மோ."


அங்ஙனம் அவர் இயற்றிய செய்யுட்கள் மிகச் சிறந்தனவாக இருந்தனவென்பது,
(வெண்பா)
2சேவிலுயரம்பலவர் சேவடிக்குச் செந்தமிழாப்
பாவிலுயுர் பூணாப் பலித்தவே-வாவிதொறும்
சேலாக்கள் மேலிடறுந் தென்கச்சிச் சின்ன நல்ல
காலாக்கள் தோழன் கவி."

என்பதனாற் புலப்படும்.

அவர் காலாட்கள் தோழபுரம் என்னும் ஓர் அக்ரஹாரத்தை நிறுவினார்.

அவர் நல்ல ஞானியாதலின் க்ஷேத்திரயாத்திரை செய்துவரவேண்டு மென்னும் அவாவுடையரானார். உடனே சிதம்பரம் சென்று ஸ்ரீ நடராஜ மூர்த்தியைத் தரிசித்துத் தம் குருவை வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டார். வேதாரணியம் போக எண்ணி வருகையில் இடையில் ஒரு சிறு சிவாலயத்தையும் அதன ருகில் ஒரு தடாகத்தையும் கண்டார். அன்று மாலை சிவதரிசனம் செய்துவிட்டு இரவில் அங்கேயே தங்கினார். அவர் உறங்குகையில் அவருடைய கனவில் சிவபெருமான் ஒரு பெரியவராகி எழுந்தருளி அந்த இடத்தை இராசதானியாக்கிக் கொண்டால் மேன்மேலும் எல்லா நலங்களும் வளருமென்று கட்டளை யிட்டார்.


உடையார் பாளையம்:
விடியற்காலையில் எழுந்த சின்ன நல்லப்ப உடையார் சிவபிரானது கருணைத் திறத்தை நினைத்து உள்ளங்குழைந்து போற்றினார். ஆலயத்துக்கு அருகில் வசித்திருந்தவர்களிடமிருந்து அவ்வாலயம் முற்கபுரீசருடையதென்றும் அத்தீர்த்தம் காண்டீப தீர்த்தமென்றும் அறிந்தார். பின்னும் தலமகிமையை நன்றாகத் தெரிந்து கொண்டார். சிவபிரானுடைய கட்டளைப்படி அவ்வூரில் பெரிய அரண்மனையைக் கட்டுவித்துத் தமக்குரிய படைகளை அங்கே வருவித்தனர். தமக்கு எல்லா நலங்களையும் தருவது சிவபிரான் திருவருளே என எண்ணி முற்கபுரீசர் ஆலயத்தையும் விரிவுற இயற்றுவித்துப் பல வீதிகளையும் நிருமித்து நித்திய நைமித்திகங்கள் சிறப்புற நடக்கும்படி நிவந்தம் அமைத்தனர். அவர் அமைத்துக்கொண்ட அவ்விராசதானியே இந்த உடையார் பாளையமாகும்.

முற்கபுரியென்னும் பெயரால் வழங்கிவந்த இத்தலம் சின்ன நல்லப்ப உடையார் இராசதானியாக்கிக் கொண்ட பின்பு உடையார் பாளையம் என வழங்கிவரலாயிற்று. அறநெறியும் தவநெறியும் வழாமல் அரசு புரிந்து வந்த அவர் அளவிறந்த தருமங்கள் செய்தனர். குரு நமச்சிவாயருடைய கட்டளையின்படி சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு உச்சிக்காலக் கட்டளை நடைபெறும் வண்ணம் இளங்கம்பூரென்னும் கிராமத்தை மானியமாக அளித்தனர்' இச்செய்தி,

(எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்)

"தென்னருணை மருவுகுகை நமச்சிவாய
தேவனருள் குருநமச்சிவாய தேவன்
மன்னுபுகழ்ப் புலியூரம் பலத்தில் வாழும்
வள்ளலுச்சிக்காலக்கட்டளைக்கு வாய்ப்ப
இந்நிலமெலாம் புகழுமரசூர்ப் பற்றின்
இளங்கம்பூர்ச் சாதனக்கல் எழுதி நாட்டி
நன்னெறி சேர் காலாட்கள் தோழன் சின்ன
நல்லானென்றிடு துரையே நடாத்தினானே."


என்னும் செய்யுளாற்புலப்படும். அவருடைய உருவம் சிதம்பரம் குரு நமச்சிவாயர் மடத்தைச் சார்ந்த தடாகத்தின் கரையில் சிலையில் அமைக்கப் பட்டிருக்கின்றது. இறைவனிடம் 'இடையீடில்லாத அன்பும், மெய்யுணர்வும், கொடைவளமும், தமிழறிவும் வாய்ந்த இந்தச் சின்ன நல்லப்ப உடையாரே உடையார் பாளையம் ஸமஸ்தானத்தை நிறுவியர். பலவகையிலும் அவர் சிறப்புற்று வாழ்ந்து வந்தார்.

உடையார் பாளையம் பின் வந்தவர்கள்
அவருக்குப் பின்பு பல ஜமீன்தார்கள் ஆட்சி புரிந்து வந்தனர். அவர்கள் உடையார் பாளையத்தைச் சூழ்ந்துள்ள காடுகளை அழித்து வளப் படுத்தினர். அதனால் அவர்களுடைய வருவாய் அதிகமாயிற்று. உடையார் பாளையத்தையும் நன்னகராக அமைத்தனர். புலவர்களையும் தம்பால் அடைக்கலம் புகுந் தோரையும் ஆதரித்தனர். பலவகையான அறங்களைச் செய்தனர். சிவ விஷ்ணு ஆலயங்கள் பலவற்றைப் புதுப்பித்து அங்கங்கே பல திருப்பணிகள் செய்வித்துக் கட்டளைகளும் நடைபெறச் செய்தனர். அஞ்சினா ருக்கு அடைக்கலத்தானமாகவும் வித்துவான்களுக்குத் தாய்வீடாகவும் வீரர்களுக்கு இருப்பிடமாகவும் உடையார் பாளையம் விளங்கி வந்தது.

மன்னார்குடி, ஸ்ரீமுஷ்ணம், திருப்பனந்தாள், கங்கைகொண்டசோழபுரம், குருகைகாவலப்பன் கோயில் முதலிய பல தலங்களில் பலவகைத் திருப்பணிகள் அவர்களாற் செய்விக்கப் பட்டன. கங்கைகொண்ட சோழ புரத்தில் உள்ள சிவாலயத்தில் ஒரு சிங்கக் கிணறு இருக்கிறது. அதிலுள்ள ஒரு சிறுகல்லில் 'காலாட்கள் தோழ உடையார் தர்மம்' என்று எழுதப் பட்டிருக்கிறதென்பர்.

வேங்கடப்ப உடையாரென்பவர் காலத்தில் இங்கே நாணயங்கள் அச்சிடப் பட்டு 'உடையார்பாளையும் புதுப்பணம்' என்று வழங்கி வந்தன வாம். இப்பொழுது கூட உடையார் பாளையத்தில் சில பழைய நாண யங்கள் அகப்படுகின்றனவென்பர்.

நல்லப்ப உடையாரென்னும் ஜமீன்தார் பல அரசர்களுக்கு அடைக் கலங்கொடுத்துப் பாதுகாத்து வந்தார். அவர் காலத்தில்தான் மஹமதிய அரசர்களின் படையெழுச்சியினால் காஞ்சீபுரத்திலுள்ள ஸ்ரீ ஏகாம்ப ரேசுவரர், ஸ்ரீகாமாட்சியம்பிகை, ஸ்ரீவரதராஜர் முதலிய மூர்த்திகள் உடையார் பாளையத்திற்கு எழுந்தருளுவிக்கப் பெற்றன. உடையார் பாளையத்திற்குச் சென்றால் அச்சமின்றி இருக்கலாமென்ற நம்பிக்கை யாவருக்கும் இருந்து வந்தது. பிற தலங்களிலிருந்து கொணரப்பட்ட மூர்த்திகளுக்கு ஒரு குறைவுமின்றி நித்திய நைமித்திகங்கள் ஜமீன் தாரால் நடத்துவிக்கப் பெற்றன. அந்த மூர்த்திகள் எழுந்தருளி யிருந்த மண்டபங்கள் அவ்வம் மூர்த்திகளின் பெயராலேயே வழங்கி வரலாயின. அக்காலத்தில் உடையார் பாளையமே காஞ்சீபுரமாக விளங்கிவந்தது. புலவர்களெல்லாம் நல்லப்ப உடையாரைப் பாமாலை சூட்டிப் புகழ்ந்த னர். அவர் அக்காலத்தில் 'ஈஸ்டு இந்தியா கம்பெனி'யாருக்கு உதவி புரிந்து அவர்களிடமிருந்து யானைகளையும் சில கிராமங்களையும் பெற்றனர்.

ரங்கப்ப உடையாரென்னும் ஒருவர் ஷோடச மகாதானங்கள் செய்தார். அதற்கு மூன்று லக்ஷம் பொன் செலவாயின. அவர் வடமொழியிலும் தென்மொழியிலும் நல்ல பயிற்சி உடையவர்; ஞானநூல்களை நன்கு பயின்றவர்; சீலம் உடையவர். அவரை இரு மொழிப்புலவர்களும் பல படப் பாராட்டிப் புகழ்ந்தி ருக்கின்றனர். அவர் தூயவாழ்வும் தவ ஒழுக்க மும் உடையவராகி இருந்தனர். பற்றற்ற மனம் உடையாராய் எப்பொ ழுதும் துறவியைப் போன்ற ஒழுக்கத்தை மேற்கொண்டு விளங்கினார். அதனால் அவரை யாவரும் 'ராஜரிஷி' என்று அழைத்து வந்தனர். அவர் காலத்தில் உடையார்பாளையம் ஞானபூமியாக விளங்கிற்று. அவர் அரசாண்டு வருகையில் சகவருஷம் 1632-இல் காஞ்சீபுரத்திலிருந்து எழுந்தருளியிருந்த மூர்த்திகளுள் ஸ்ரீஏகாம்பரேசுவரரும், ஸ்ரீவரதராஜப் பெருமாளும் மீண்டும் காஞ்சீ புரத்திற்கு எழுந்தருளுவிக்கப் பட்டனர். காமாட்சியம்பிகையின் ஸ்வர்ண விக்கிரஹம் மட்டும் இவ்வூரிலேயே இருந்ததாகத் தெரிய வருகிறது. அவர் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோயிலில் ஆஸ்தான மண்டபமும் கல்யாண மண்டபமும் கட்டு வித்தார்; பூஜை முதலிய வற்றிற்காகச் சில கிராமங்களை மானியமாக அளித்தார். சில சிவாலயங்களிலும் திருப்பணிகளைச் செய்வித்து இறையிலி நிலங்களையும் கிராமங்களையும் வழங்கினார்.

ஜனக மஹாராஜரைப் போல் அரசாட்சி மிகச் செவ்வையாக நடை பெறும்படி செய்து உள்ளத்தே பற்றில் லாமல் வாழ்ந்து வந்தாலும் ரங்கப்பக் காலாட்கள் தோழ உடையாருக்கு எல்லா வியவஹாரங்களையும் விட்டுவிட்டு 'வரம்பறு திருவினை மருவும் அருத்தி' உண்டா யிற்று. அவருடைய குமாரராகிய யுவரங்கப்ப உடையார் 'மகனறிவு தந்தையறிவு' என்பதற்கேற்ப இளமையிலே அறிவும் அன்பும் சீலமும் உடையவராக விளங்கினார். அதனையறிந்த ரங்கப்ப உடையார் மகிழ்ந்து அவருக்கே தம்முடைய பட்டத்தையளித்து அரசியற்பாரத்தை அவரிடம் ஒப்பித்துவிட்டு இறைவன் திருவடிக்கண் உள்ளத்தை ஒடுக்கித் தவம் செய்யலானார்.

யுவரங்க பூபதி

எந்தக் காலத்திலும் வித்துவான்களுடைய ஸமூகத்தில் அடிக்கடி புகழப்படும் உபகாரிகள் சிலர் உண்டு. தமிழ் நாட்டில் எத்தனையோ அரசர்களும் பிரபுக்களும் பிறரும் புலவர்களை ஆதரித்து வந்திருக் கிறார்கள். அவர்களெல்லோருடைய புகழும் பரவி யிருந்தாலும் சிலருடைய புகழ்களே பல சமயங்களில் ஸபை களில் எடுத்துச் செல்லப் படுகின்றன. அத்தகையவருடைய நற்செயல்கள் புலவர்கள் பேச்சுக்களுக்கு இடையே அடிக்கடி பாராட்டப் பெறுகின்றன.

அத்தகைய பெருமை வாய்ந்தவர்களுள் யுவரங்க பூபதியும் ஒருவர். 'யுவரங்கன் இப்படிச் செய்தான், யுவரங்கன் செய்ததைக் கேட்டீர்களா?" என்று வித்துவான்கள் சந்தோஷத்துடன் தம்முள் சொல்லிக் கொள்ளும் வரலாறுகள் பல உண்டு. அவருடைய அருமைச் செயல்கள் இன்றளவும் பலராலும் பாராட்டப் படுகின்றன. அவரினும் பெரிய செல்வ நிலையில் இருந்தவர்களைப் பற்றிச் சொல்லும்பொழுது கூட அவரை உவமையாக எடுத்துக் கூறுவதை வித்துவான்கள்பாற் கேட்கலாம்.

உடையார்பாளையத்தில் இருந்த ஜமீன்தார்களுள் யுவரங்கருடைய புகழ் மற்ற எல்லோருடைய புகழிலும் மேற்பட்டு விளங்குகின்றது.

'மன்புகழ் பெருமை நுங்கள்
மரபினோர் புகழ்கள் எல்லாம்
உன்புகழ் ஆக்கிக்கொண்டாய்
உயர்குணத் துரவுத்தோளாய்"


என்று பரதனைப் பற்றிக் குகன் கூறியதாகக் கம்பர் சொல்லியிருப்பது யுவரங்கருடைய விஷயத்திலும் பொருத்தமுடையதென்று தோற்றுகிறது.

ரங்கப்பர் என்பது அவருடைய இயற்பெயர்; தம்முடைய தந்தையார் காலத்திலேயே ஜமீன் ஆட்சியைப் பெற்று யுவராஜாவாக இருந்தவராத லின் அவர் 'யுவரங்கப்பக் காலாட்கள் தோழ உடையார்' என்று வழங் கப்பட்டார். அவர் பதினெட்டு வருஷங்களே ஆண்டு வந்தனரென்று தெரிகிறது.

அருங்கலை விநோதராகிய அவர் தமிழிற் புலமையுடையவராக இருந்தார். வடமொழியிலும் அவருக்குப் பயிற்சி இருந்தது. ஸங்கீதத் தில் மிக்க பழக்கம் அவருக்கு உண்டென்று தெரிய வருகிறது. எப்பொழுதும் வித்துவான்களுக்கு இடையில் இருந்து அவர்களுடைய அறிவையும் ஆற்றல்களையும் அறிந்து இன்புறுவதையே பொழுது போக்காகக் கொண்டிருந்தார். அக்காலத்தில் இருந்த வடமொழி தென் மொழி வித்துவான்களிற் பெரும்பான்மையோரும் ஸங்கீத வித்துவான் களிற் பலரும் யுவரங்கர்பால் வந்து வந்து தம்முடைய கலைத் திறத்தைக் காட்டிப் பரிசு பெற்றுச் செல்லுதலையே ஒரு நன்மதிப்பாகக் கருதி வந்தனர்.

உடையார்பாளையத்திற்கு வித்துவான்கள் வந்தால் யுவரங்கருடைய உத்தரவுப்படி அரண்மனை உத்தியோகஸ்தர்கள் அவர்களை உபசரித்து அவர்கள் தங்குவதற்குரிய தக்க இடங்களை அமைத்துக் கொடுப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய பொருள்கள் அவ்வவ்விடங்களில் அமைக்கப்படும். வேலை யாட்கள் அவர்கள் விருப்பத்தின்படி எந்தச் சமயத்தில் எது வேண்டுமோ அதைச் செய்யும் பொருட்டு அவ்வவ்விடங்களில் காத்திருப்பார்கள். வித்துவான்கள் ஸந்தோஷமாக இருக்கும்பொழுது யுவரங்கர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வலிய வந்து கண்டு ஸல்லாபம் செய்துவிட்டுப் போவார். இங்ஙனம் வந்து பழகும் இயல்பு யுவரங்கருக்கு ஒரு தனிப்புகழை உண்டாக்கியது. தங்கள் வித்தையை அறிந்து அளிக்கும் பரிசு சிறிதாயினும் சிறந்ததாகக் கொள்வது வித்துவான்களின் இயல்பு; ஆதலின் யுவரங்கருடைய வரிசை யறியும் திறனை அறிந்த வித்துவான்கள் அவராற்பெறும் பரிசுகளை மிகச் சிறந்தனவாகவே மதித்து வந்தனர்.
கோபால சாஸ்திரிகள்

வடமொழி வித்துவான்களிற் பலர் யுவரங்கரைப் பலவகையாகப் புகழ்ந்திருக்கின்றனர். அவருடைய ஆஸ்தான பண்டிதராகக் கோபால சாஸ்திரிகள் என்ற சிறந்த வித்துவான் ஒருவர் இருந்தார். அவருடைய கவிகள் மிகவும் இனிமையுடையனவாக இருக்கும். 'அபிநவ காளி தாஸர்' என்னும் பட்டம் அவருக்கு யுவரங்கரால் வழங்கப்பட்டது. யுவரங்கர் அவரை எந்தக் காலத்திலும் தம்முடன் இருக்கும்படி செய்தனர்; எங்கே போனாலும் அவரை உடனழைத்துச் செல்வார். அந்த அந்தச் சமயங்களுக்கு ஏற்றவாறு தம்முடைய கவி சாதுரியத்தாலும் சொல்லினிமையாலும் யுவரங்கரை அந்த வித்துவான் மகிழ்ச்சியுறச் செய்து வருவார். இருவரும் ஒருவரையொருவர் விட்டுப் பிரியார்.

ஒருமுறை யுவரங்கர் வேட்டையாடச் சென்றார். கோபால சாஸ்திரி களும் உடன் சென்றனர். ஒரு காட்டின் நடுவில் ஓர் ஐயனார் கோவில் இருந்தது. அதில் இருந்த விக்கிரகம், வலக்கைச் சுட்டு விரலை மூக்கின் மேல் வைத்த நிலையில் இருந்தது. அதைக் கண்ட யுவரங்கர், "இந்த ஐயனார் மூக்கில் விரல் வைத்துக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணத்தைக் கற்பித்துச் சொல்லவேண்டும்" என்றார். உடனே சாஸ்திரிகள், 'நமக்கோ ஹரிஹர புத்திரனென்னும் பெயர் இருக்கிறது. நம்முடைய தந்தையார் பரமசிவன. தாயாரோ மோகினியாகிய விஷ்ணு. அவர் திருமகளாகிய தேவியரை மணந்து புருஷோத்தமரென்ற கெளரவத் துடன் வாழ்கின்றார். அவரை நாம் தாயாரென்று அழைப்பதா? தந்தை யாரென்று அழைப்பதா? இப்படிப்பட்ட நிலையில் இருக்கிறோமே! என்ன செய்வது?' என்று வியப்புடன் ஆழ்ந்த ஆலோசனை செய்கிறாரென்னும் கருத்தை அமைத்து ஒரு சுலோகம் சொன்னார். கேட்ட யுவரங்கர், "ஐயனார் ஆழ்ந்து ஆலோசிப்பதாக அமைத்த இந்தச் சுலோகம் சிறிதும் ஆலோசனை பண்ணாமல் விரைவிற் சொல்லப் பட்டது எனக்கு வியப்பாக இருக்கிறது" என்று கூறி அந்தக் கருத்தின் பொருத்தத்தை உணர்ந்து பாராட்டினார். 1

அயல்நாட்டு அரசர்களால் அடிக்கடி நேர்ந்த கலகங்களுக்கு அஞ்சி உடையார்பாளையத்திலும் வேறு பாதுகாப்புள்ள இடங்களிலும் எழுந்தருளச் செய்து வைக்கப்பட்ட மூர்த்திகளுக்கு உரிய பூஜை முதலியன யுவரங்கருடைய காலத்தில் குறைவின்றிச் செவ்வையாக நடைபெற்று வந்தன. அந்த அந்த மூர்த்திக ளுக்கு உரிய ஸ்தலங்களில் இருக்கும் பொழுது எங்ஙனம் நித்திய நைமித்திகங்கள் நடைபெற்று வருமோ அங்ஙனமே அக்காலத்திலும் நடைபெற்று வரும்படி அவர் செய்து வந்தார். அங்ஙனம் நடைபெறுகின் றனவா என்பதை அங்கங்கே ஒற்றர் களை வைத்து அறிந்தும் தாமே மாறு வேடம் பூண்டு ஒருவரும் அறியாமற் சென்று பார்த்தும் வருதல் அவருடைய வழக்கமாக இருந்தது.

ருநாள் இரவு அவர் கோபால சாஸ்திரிகளுடன் திருவாரூர் சென்று கோயிலை அடைந்து ஸ்ரீவன்மீகநாதர் முதலிய மூர்த்திகளைத் தரிசனம் செய்தார். அங்கே அவ்வாலயத்தில் மேற்குப் பிராகாரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தியாகராஜமூர்த்தியோடு சிதம்பரம் ஸ்ரீ நடராஜ மூர்த்தியும் பாதுகாப்புக்காக எழுந்தருளச் செய்யப் பாட்டிருந்தார். அதனால் அந்த மண்டபம் இன்றும் நடராஜ மண்டபம் என்னும் பெயரால் வழங்கும்.

ஸ்ரீநடராஜ மூர்த்தியையும் ஸ்ரீதியாகராஜ மூர்த்தியையும் ஒருங்கே தரிசித்த யுவரங்கர் பேரன்பினால் மனமுருகி நின்றார்; அருகில் நின்ற சாஸ்திரிகளைப் பார்த்து, "இந்த இரண்டு ராஜாக்களும் சேர்ந்து இங்கே இருப்பதைப் பற்றி ஒரு சுலோகம் சொல்லவேண்டும்," என்று கேட்டுக் கொண்டார். அவர் உடனே, நடராஜ மூர்த்தி தியாகராஜ மூர்த்திக்குரிய இடத்தில் வந்தெழுந்தருளி யிருப்பதைக் குறிப்பித்து, " 96 அடிக்கம்பத் திற்கு மேல் ஆகாசத்தில் ஆடினாலும் பூமியில் வந்துதான் தானம் வாங்கவேண்டும்" என்று சமத்காரமான ஒரு கருத்தை அமைத்து ஒரு சுலோகத்தைச் சொன்னார். ஸ்ரீநடராஜப் பெருமான் 96 தத்துவங்களுக்கும் மேலே விளங்குபவரென்பது சிதம்பரம் ஆகாசஸ்தலமென்பதும் திருவா ரூர் பிருதிவிஸ்தலமென்பதும் தியாகராஜ மூர்த்தி வள்ளலென்பதும் பிறவுமாகிய விரிந்த செய்தி களைச் சுருக்கமாகப் புலப்படும்படி உலக வழக்கம் ஒன்றோடு பொருத்திக் காட்டிச் சந்தர்ப்பத்திற்கு ஏற்ற வாறு சாஸ்திரிகள் கூறிய சுலோகத் தைக் கேட்ட யுவரங்கர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை; "உங்களுடைய பழக்கத்தைப் பெறுவ தற்கு நான் எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும்" என்று மனங் குளிர்ந்து பாராட்டினார்.

ஒருமுறை கோபால சாஸ்திரிகள் ஒரு சமஸ்தானத்து அரசர் விருப்பப் படி அவர்பாற் சென்று கண்டார். பலநாளாகச் சாஸ்திரிகளுடைய கல்விப் பெருமையைக் கேள்வியுற்ற அவ்வரசர் கோபால சாஸ்திரி களைப் பாராட்டிப் பலவகைப் பரிசுகளை வழங்கினார். அவற்றைக் கண்ட அந்த ஸமஸ்தானத்து வித்து வான்களிற் சிலர், "யுவரங்கரிடம் இவர் எவ்வளவோ ஸம்மானம் பெற்றிருக்கலாம். ஆனாலும் இங்கே பெற்றதைப் போல இராது" என்று தம்முள் பேசிக்கொண்டிருந்தார்கள். அது கோபால சாஸ்திரிகள் காதிற்கு எட்டியது.

அவர் மிகவும் தைரியசாலி. 'வித்துவான்களுடைய இங்கிதமறிந்தும் வரிசையறிந்தும் ஸம்மானம் செய்யும் யுவரங்கர் எங்கே? இவரெங்கே' என எண்ணினார். உடனே 1* அஜ்ஞாநாம்' எனத் தொடங்கும் ஒரு சுலோகத்தைக் கூறினார். அதில் அறிவில்லாத அரசர்கள் நாள்தோறும் செய்யும் கனகாபிஷேகத்தைக் காட்டிலும் ஸ்ரீயுவரங்க பூபதியின் ஒரு சிரக்கம்பமே மேலானது என்னும் கருத்தும் அதற்குரிய உவமானமும் அமைந்திருந்தன. வித்தியா வீரராகிய சாஸ்திரிகள் உடனே விடை பெற்றுக் கொண்டு உடையார்பாளையம் வந்துவிட்டார். அவருடைய மனத்துணிவையும் யுவரங்கர்பால் அவருக்கிருந்த அன்பையும் இச்செயலால் எல்லோரும் அறிந்து அவரை மிகப் பாராட்டினர்.2*
ராமா சாஸ்திரிகள்

கோபால சாஸ்திரிகளின் குரு கோழிமங்கலம் ராமா சாஸ்திரிக ளென்பர். அவர் கோபால சாஸ்திரிகளைப் போன்ற பலருக்குப் பாடஞ் சொன்ன பெருமை வாய்ந்தவர்; சாஸ்திரங்களெல்லாவற்றிலும் பயிற்சி யுடையவர். வீட்டில் இருந்து அநுஷ்டானங்களைச் செய்வதும், நூல் களை வாசிப்பதும், பாடஞ் சொல்வது மாகிய காரியங்களை மட்டும் செய்து பொழுது போக்கிக்கொண்டு வந்தார். யாரையும் போய்ப் பார்த்துப் பொருளுதவி பெறும் வழக்கம் அவரிடம் இல்லை; அதில் வெறுப்பும் இருந்தது. மிகவும் வறிய நிலையில் வாழ்ந்து வந்தார். மற்ற வித்து வான்களெல்லாம் பல சம்ஸ்தானங்களுக்குச் சென்று ஸம்மானங் களைப் பெற்று வருவதை அறிந்தும் அவருக்கு அங்ஙனம் போய்வருதலில் ஸம்மதம் இல்லை. சிஷ்யர்க ளெல்லாம் அவரைத் தெய்வமாக எண்ணி வழிபட்டு வந்தனர். மற்ற வித்துவான்களும் அவரிடத்தில் மரியாதையும் மதிப்பும் உடையவர்களாக இருந்தனர்; அவர்களுட் சிலர் ஸமஸ்தானங்களுக்குப் போனால் அவர் வித்தையைப் பலர் அறிய முடியுமென்றும் ஸம்மானம் பெறலாமென்றும் கூறுவதுண்டு. அவற்றை யெல்லாம் அவர் செவிக்கொள்ளவே இல்லை.


"நெடுந்தூரத்திலுள்ள இடங்களுக்குப் போகவேண்டாம். ஸமீபத்தில் இருக்கும் உடையார்பாளையம் ஜமீன்தாராக உள்ள யுவரங்கர் தாரதம்ய ஞானம் நிரம்பப் பெற்றவர். அங்கே நீங்கள் வந்தால் எங்களுக்கு அநுகூ லமாக இருக்கும்.' என்று அவருடைய சிஷ்யர்கள் சொல்லிப் பிரார்த் தித்தார்கள். பின்பு கோபால சாஸ்திரிகளும் அவர்பால் வந்து, "உங்களை ஜமீன்தார் தரிசனம் செய்து ஸல்லாபம் செய்யவேண்டு மென்று விரும்புகிறார். தாங்கள் அங்ஙனம் செய்தால் அவருக்கு எவ்வளவோ சந்தோஷமாக இருக்கும். என்னைப் போன்றவர்களுக்கும் நன்மை உண்டாகும்." என்றார். ராமா சாஸ்திரிகள், "நான் வந்தால் அவர் ஏதாவது கொடுப்பார்; இதுவரையில் நான் யாரிடத்தும் போனதுமில்லை; பிரதிக்ரஹம் வாங்கினதுமில்லை. இனிமேல் புதிதாக அந்த வழக்கத்தை வைத்துக்கொள்வது எதற்கு?" என்றார். அவருடைய நிராசையை நன்கு அறிந்த கோபால சாஸ்திரிகள் பலவகையாக அவருக்கு ஸமாதானம் கூறினார்; "நீங்கள் ஒன்றும் பெற்றுக் கொள்ள வேண்டாம்; தாம்பூலம் மட்டும் பெற்று வந்து விடலாம். உங்களுடைய தரிசனத்தை மாத்திரம் தந்துவிட்டு வந்தால் அவருடைய ஆசை தீர்ந்துவிடும். இந்தத் தேசத் தில் அவரைப் போன்ற ஸாரக்ராஹியையும் வித்வஜ்ஜன பரிபாலகரை யும் தாரதம்ய ஞானம் உடையவரையும் எங்கும் காண முடியாது" என்று சொன்னார். ராமா சாஸ்திரிகள் தாம்பூலம் மாத்திரம் பெற்றுக் கொள்வதாக நிபந்தனை கூறிவிட்டு உடையார்பாளையம் வர ஒருவாறு ஸம்மதித்தார்.

ஒருநாள் கோபால சாஸ்திரிகள் தம் குருவை உடையார் பாளையத்திற்கு அழைத்துச் சென்றார். ராமாசாஸ்திரிகள் கோபால சாஸ்திரிகள் சொல்லிக் கொடுத்தபடி ஒரு தேங்காயை எடுத்துச் சென்று ஒரு சுலோகம் சொல்லி யுவரங்கர் கையில் கொடுக்க நினைந்து தேங்கா யையும் மங்கள சுலோகத்தையும் ஸித்தப்படுத்திக்கொண்டார். அரண்மனையில் நுழைந்தவுடன் அவருக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. அங்கங்கே காவலாளர்கள் சட்டையணிந்து கையில் ஆயுதங்களோடு நிற்றலையும் அங்கே பழகுபவர்க ளெல்லாம் பயத்துடனும் மரியாதையுடனும் ஒழுகுவதையும் கண்டார். அத்தகைய காட்சிகளை அதற்கு முன் அவர் காணாதவர். பின்பு உள்ளே சென்று யுவரங்கருடைய ஆஸ்தான மண்டபத்தை அடைந்தார். கோபால சாஸ்திரிகள் அங்கே சென்றவுடன் யுவரங்கர்பால் அவரை அழைத்துச் சென்றார். அங்கே இருந்த காட்சியைக் கண்ட ராமா சாஸ்திரிகளுக்கு உடம்பெல்லாம் வேர்த்தது. அதுகாறும் அத்தகைய இடங்க ளுக்குச் சென்றவரல்லராதலின் மனத்திற்குச் திருப்தியில்லாத காரியம் ஒன்றை நிர்ப்பந்தத்திற்காகச் செய்ய ஒப்புக்கொண்டது பற்றி அவர் மனம் கலக்கமுற்றது. யாசகம் செய்தலைப் போன்ற ஒன்றைத் தாம் செய்யத் துணிந்துவிட்டதாக அவர் எண்ணிய கருத்தே அவரை அந்த நிலைக்குக் கொண்டுவந்து விட்டது.

யுவரங்கர் அவர்களைக் கண்டு எழுந்து நின்றார். "இவர்கள் தாம் எங்கள் ஆசார்யர்கள்" என்று கோபால சாஸ்திரிகள் யுவரங்கரிடம் சொன்னார்.


"அப்படியா! தன்யனானேன்" என்று சொல்லிக்கொண்டே ஜமீன்தார் ராமா சாஸ்திரிகளைப் பார்த்தார். அவருடைய உடம்பு முழுவதும் வேர்த்திருப்பதையும் நடுங்குவதையும் கண்ட ஜமீன்தார் பேசினால் அவருக்குத் தைரியமுண்டாகுமென்று எண்ணி, "தங்கள் திருநாமத்தை நான் அறியலாமோ?" என்று கேட்டார்.


நடுங்கிக் கொண்டிருந்த சாஸ்திரிகளுக்குப் பேசமுடியவில்லை; கஷ்டப்பட்டு, "ராமாமங்கலம் கோழி சாஸ்திரிகள்" என்று சொன்னார். கோழிமங்கலம் ராமா சாஸ்திரிகள் என்று சொல்ல வந்தவர் அச்சத் தால் அப்படி மாற்றிச் சொல்லிவிட்டார். உடனே சுலோகத்தையும் சொல்லித் தேங்காயை யுவரங்கர் கையில் கொடுத்தார். கொடுக்கும் பொழுது கை நடுக்கத்தால் அவர் கையிற்படும்படி சரியாகக் கொடா மையால் அது தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது.

பின்புதான் சாஸ்திரிகளுக்கு உணர்ச்சியும் தைரியமும் உண்டாயின. எவ்வளவோ பேர்கள் கூடியிருக்கிற ஓரிடத்தில் தாம் அங்ஙனம் நடந்துகொண்டது அநுசிதமென்றும் அவ்வளவு அதைர்யப் படுதல் கூடா தென்றும் எண்ணினார். தேங்காய் உடைந்தவுடன் அந்த ஒலியே அவருக்கு ஒரு துணிவை உண்டாக்கிற்று. உடனே தலைநிமிர்ந்து, "உங்களை உடையாரென்று சொல்வார்கள். ஆயினும் என்ன காரணத் தாலோ இது விழுந்து உடைந்துவிட்டது" என்று சொன்னார். அங்கே இருந்த யாவரும் அவரைக் கவனித்துக்கொண்டே இருந்தவர்களாதலின் அந்தச் சாதுர்யமான பேச்சைக் கேட்டு மகிழ்ந்தார்கள்.

பின்பு அவர் அங்கே யுவரங்கரோடு ஸல்லாபம் செய்துகொண்டு சில நாள் இருந்தார். யுவரங்கர் அவருடைய ஞான நிலையையும் மற்றவர் களால் அவர் மதிக்கப்பட்டிருத்தலையும் நன்றாக அறிந்து மகிழ்ந்தார். பிறகு, அவர் விடைபெற்றுக்கொள்கையில் தாம்பூலத்தை யன்றி வேறொன்றும் பெற்றுக்கொள்ளாமல் ஊர் சென்றார். அவருடைய நிராசையையும் பெருந்தன்மையையும் யுவரங்கர் பாராட்டினார்.

நறுமலர்ப்பூங்குழல் நாயகி மாலை

யுவரங்கர் தமிழில் மிக்க பயிற்சியை உடையவர். உடையார் பாளையத் திற்கோயில் கொண்டெழுந்தருளியுள்ள நறுமலர்ப்பூங்குழல் நாயகி மீது அவர் இயற்றியதாக ஒரு மாலை வழங்குகின்றது. நெடுங்காலம் புத்திர பாக்கியமில்லாமையால் அவர் வருந்தினாரென்பது அம்மாலையிலுள்ள,


(கட்டளைக்கலித்துறை)
"நீமட்டும் நன்மணியாகிய மக்கள் கண் நேயம் வைத்தாய்
யாமட்டும் புத்திரனில்லா திருப்பதழகதுவோ
சாமட்டு மேதுயர் வாரியின் மூழ்குதல் தன்மமதோ
நாமட்டு றாச்சீர் நறுமலர்ப்பூங்குழல் நாயகியே"


என்னும் செய்யுளால் தெரியவருகிறது.

அம்மாலை முப்பத்திரண்டு செய்யுட்களை உடையது; எளிய நடையில் அமைந்தது. அதிலுள்ள இரண்டு செய்யுட்கள் வருமாறு;

"கன்றோடப் பார்க்குங்கொலோகற வைப்பசு கைக்குழவி
சென்றோடப் பார்ப்பள் கொலோபெற்ற மாது திருக்கண்வைத்தே
என்றோடம் நீக்கி யினிமை செயாமலிருப்பதுவும்
நன்றோ வுனக்கு நறுமலர்ப்பூங்குழல் நாயகியே."


"தனந்தரு வாய் கல்வி கற்கும் அறிவொடு சந்தமிகு
மனந்தருவாய் நின்னைப் போற்றுந் தகைக்குவண் சாதுசங்க
இனந்தருவாய் நின்றிரு நோக்கம் வைக்க விலங்குறுமா
னனந்தருவாய் நன்னறுமலர்ப்பூங்குழல் நாயகியே."

(இலங்குறும் ஆனனம்: ஆனனம்-முகம்)

புலவர்கள் இயற்றிய செய்யுட்கள்

தமிழ் வித்துவான்களிடம் யுவரங்கருக்கு இருந்த அபிமானம் அவர்பால் பல வித்துவான்களை வரச் செய்தது. அவருக்குத் தமிழ்ப்பயிற்சி இருந்த மையின் உண்மைப் புலமையை அறிந்து உவக்கும் திறம் நன்றாக அமைந்திருந்தது. பெயரளவில் தமிழ்ப்புலவர்களாக வந்து எதையாவது பாடிவிட்டு அவர்பால் ஸம்மானம் பெற்றுச் செல்லமுடியா தென்பதை யாவரும் நன்கு அறிந்திருந்தார்கள். அதனால் யுவரங்கர்பாற் சென்றால் தங்களுடைய உண்மை ஆற்றல் புலப்படுமென்றும் கல்வியறிவில்லாத வர்களோடு ஒருங்கு வைத்து எண்ணும் அபாக்கியம் தங்களுக்கு நேராதென்றும் எண்ணிப் பல தமிழ்ப்புலவர்கள் வந்து வந்து பல நாள் இருந்து வாயாரப் புகழ்ந்து ஸம்மானம் பெற்று மனங்குளிர்ந்து செல் வார்கள். அத்தகையவர்கள் பாடிய செய்யுட்கள் எத்தனையோ பல இருந்திருத்தல் கூடும். இப்பொழுது சில பாடல்களே கிடைக்கின்றன.

யுவரங்கர் தம்பால் வந்த தமிழ்ப்புலவர் ஒருவரைக் கொண்டு கொன்றை வேந்தனில் உள்ள ஒவ்வொரு நீதிவாக்கியத்தையும் ஒவ்வொரு விருத் தத்தின் இறுதியில் அமைத்து ஒரு நூல் செய்யும்படி கேட்டுக் கொண்டார். அவர் அங்ஙனமே செய்து அரங்கேற்றினார். தக்க பரிசில்கள் அவருக்கு வழங்கப்பட்டன். அந்நூல் இப்பொழுது கிடைக்கவில்லை.1

ஒரு காலத்தில் உடையார் பாளையத்தைச் சார்ந்த இடங்களில் பஞ்சம் உண்டாயிற்று. அக்காலத்தில் யுவரங்கர் உடையார்பாளையத்திற்கு வந்த யாவருக்கும் அன்னமளித்துப் பாதுகாத்தார். அதனைப் பாராட்டிப் பலர் பல செய்யுட்கள் பாடியுள்ளார். அவற்றுள் ஒன்று வருமாறு:

(விருத்தம்)

"கன்னன் கொடுத்த பசுக்கிடையும்
கடவுள் கொடுத்த திருவோடும்
தென்னன் கொடுத்த மணிவீடும்
சேரன் கொடுத்த பொன்னாடும்
மன்னன் கச்சி யுவரங்கன்
வாவாவென்று பஞ்சத்தில்
அன்னங்கொடுத்த கொடைக்கு நிகர்
அன்றாம் என்றும் இல்லையே."


(பசுக்கிடை-பசு மந்தை)

வேறொரு சமயத்தில் ஒரு வித்துவான் தமக்குக் கலியாணம் செய்து கொள்ளப் பொருளுதவி செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டு பின் வரும் செய்யுளைச் சொன்னார்:
(கட்டளைக் கலித்துறை)
"தேமிக்க வின்றுணை கொண்டோர் கனியைச் செறிவதற்கா
நாமொய்த்த தண்பொழில் சுற்றின மித்துணை நாட்கள் மனம்
காமித்த வக்கனி யிந்நாளடையக் கருணைசெய்வாய்
தாமத் தடந்தோள் யுவரங்கனென்னுந் தருவரசே."


(கனியை- கன்னிகையை; பழத்தை என்பது வேறு பொருள். பொழில்-பூமி; சோலையென்பது வேறு பொருள். தருவரசு- கற்பகம்)

தமிழ்ப்புலவர்கள் அவ்வப்பொழுது யுவரங்கர் மீது பாடிய செய்யுட்களிற் சில வருமாறு:-

(வெண்பா)
1. "கச்சி யுவரங்கன் காவேரி அந்தரங்கன்
இச்சகத்திலென்றும் இரண்டரங்கர்- மெச்சுறவே
இந்தரங்கன் யாவரையும் ரட்சிப்பானென்றெண்ணி
அந்தரங்கன் கண்ணுறங்கினான்."
(அந்தரங்கனென்றது ஸ்ரீரங்கநாதரை)

(விருத்தம்)
2. "சந்திரன் வீ சங்குமணனரைக் காற்றாதா
சவிதாவின் கான்முளையே காற்றாதாவாம்
இந்தெனும் வாணுதலாடன் பாகத்தெம்மான்
ஈசனுமே யரைத்தாதா வென்னலாகும்
வந்திரக்கு முகுந்தனுக்கீ முக்காற்றாதா
மாவலியே யெனப் பெரியோர் வழங்குவார்கள்
இந்திரனாங் கச்சியுவரங்க மன்னன்
என்று முழுத் தாதாவென்றியம்பலாமே."


இந்தச் செய்யுள் மிக அருமையானது. சந்திரன் முதலியவர்கள் முழுத் தாதா அல்லரென்றும், யுவரங்கரே முழுத்தாதா வென்றும் இதில் சொல்லப்பட்டிருத்தல் அறிந்து இன்புறத் தக்கது. பதினாறு கலைகளில் ஒவ்வொன்றையே ஒவ்வொருநாளும் சூரியனுக்குக் கொடுப்பதனால் சந்திரன் வீசம் தாதாவானான். குமணன் தன் உடம்பில் எட்டில் ஒரு பங்காகிய தலையை அளிக்க முன்வந்தமையின் அரைக்கால் தாதா வானான். சவிதாவின் நான்முளை யென்றது கர்ணனை (சவிதா-சூரியன்); அவன் நாள்தோறும் பகலிற் பதினைந்து நாழிகையளவே தானம் பண்ணி வந்தான்; ஒரு நாளின் காற்பாகத்தில் அங்ஙனம் செய்த தனால் அவன் கால்தாதாவானான். சிவபிரான் தம் திருமேனியிற் பாதியை உமாதேவியார்க்கு அளித்தமையால் அவர் அரைத்தாதா வானார். மூன்று காலால் அளக்கப் படுவனவற்றை வழங்கினமையால் மாவலி முக்கால் தாதாவானான்.
3. வரைகளிலே பெரியவரை மகாமேருவரையென்று வர்ணிப்பார்கள்
தரைகளிலே பெரிய தரை தென்சோழமண்டலமாச் சாற்றுவார்கள்
உரைகளிலே பெரியவுரை கம்பராமாயணத்தின் உரையதாகும்
துரைகளிலே பெரியதுரை கச்சியுவரங்கனெனச் சொல்லலாமே."

ஸங்கீத வித்துவான்கள்.

யுவரங்கர் ஸங்கீத வித்துவான்கள் பலரை ஆதரித்து வந்தனர். வழக்கம் போல் ஸங்கீத வித்துவான்கள் தங்களுக்கு அமைத்த இடங்க ளில் தங்கி உபசாரங்களைப் பெற்று மகிழ்ந்து உள்ளக் கிளர்ச்சியோடு தங்களுடன் இருப்பவர்களிடம் பாடிக்கொண்டே இருப்பார்கள். அத்தகைய சமயங் களை ஒற்றர்கள் மூலம் அறிந்து யுவரங்கர் அங்கே சென்று திரை மறைவிலிருந்து கேட்டு இன்புறுவார். அவர்கள் மனங்கனிந்து தாங்களே பாடுவது மிக்க இனிமையுடையதாக இருக்குமென்பது அவருடைய கருத்து.

தஞ்சை ஸம்ஸ்தான ஸங்கீத வித்துவான்களுள் ஒருவராகிய நாராயணசாமி ஐயர் என்பவர் யுவரங்கர்பால் ஒருமுறை வந்தார். தஞ்சையில் உயர்ந்த மதிப்பை அடைந்தவர் அவர். உடையார்பாளையம் வந்த அவருக்கு வழக்கப்படி இருப்பிடம் அளித்துப் பலவகை உபசாரங் கள் செய்யப் பட்டன. ஒருநாள் அவருக்கு அங்கே நியமிக்கப்பட்டி ருந்த வேலைக்காரன் தைலம் தேய்க்கத் தொடங்கினான். ஒரு பலகையின் மேல் அவரை இருக்கச் செய்து மிக உயர்ந்த சந்தனாதித் தைலத்தைத் தலையில் சேர்த்துத் தாளம் போட்டுத் தேய்த்து வந்தான். அதுவரை யில் எங்கும் பெறாமல் அங்கே பெற்ற உணவு வகைகளாலும் உபசாரங் ளாலும் இயல்பாகவே அவருக்கு இருந்த சந்தோஷத்திற்கு அளவில்லை. பின்பு தைலத்தினால் உண்டான குளிர்ச்சியும் தேய்த்த வன் போட்ட தாளமும் அவருடைய மகிழ்ச்சியைத் தூண்டி விட்டன. தம்மையே மறந்து அவர் பாடத் தொடங்கினார். அவருக்கு உண்டான சந்தோஷத்தால் பாட்டு வரவர மேம்பட்டு இனிமை உற்றது; அந்த ஸங்கீதம் அவருக்கே வியப்பை உண்டாக்கியது. அப்பொழுது யுவரங்க ருடைய ஞாபகம் அவருக்கு வந்தது; "அடடா! இந்தப் பாட்டை யுவ ரங்கர் கேட்பதற்கு இல்லையே' என்று வருந்திச் சொன்னார். "இதோ கேட்டு ஆநந்தக்கடலில் ஆழ்ந்துகொண்டிருக்கிறேன்." என்று ஒரு சப்தம் வந்தது; அங்கே யுவரங்கர் ஒரு திரை மறைவிலிருந்து அந்தக் கனிந்த இசையமுதத்தைப் பருகிக்கொண்டிருந்தார்.


நாராயணசாமி ஐயர் திடுக்கிட்டு எழுந்தார். அருகிலிருந்த வேலைக் காரன் அவருடைய குறிப்பை அறிந்து ஒரு ரவை சல்லாத்துணியால் தலையிலிருந்த தைலத்தைத் துடைத்தான். நாராயணசாமி ஐயர் வஸ்திரம் முதலியவற்றை நன்றாக அணிந்துகொண்டார். யுவரங்கரும் அருகில் வந்து அமர்ந்தார்; மறுபடியும் வித்துவான் பாட ஆரம்பித்தார்; அவருடைய முழுவன்மையும் அன்று வெளியாயிற்று. பல கீர்த்தனங் களை அவர் பாடினார்; கடைசியில் மங்களம் பாடி நிறுத்தியவுடன் அவருடைய பார்வை அங்கே வேறொரு பக்கத்திற் சென்றது. அதனை யறிந்த யுவரங்கர், "என்ன விசேஷம்?" என்று கேட்டார். "அந்தப் பக்கத்தில் ஒரு சந்திரன் உதயமாயிற்று; அதைத் தான் பார்த்தேன்." என்று வித்துவான் கூறினார்.

அவர் பாடிக்கொண்டே இருக்கும்பொழுது அதனை அறிந்த யுவரங்கருடைய அரண்மனையில் இருந்தவளும் இசைப்பயிற்சி மிக்கவளுமாகிய தாஸி ஒருத்தி அப் பாட்டைக் கேட்க விரும்பி அங்கே வந்து, ஒரு திரை மறைவில் இருந்து கேட்டு வந்தாள். பாட்டு நின்றவுடன், "இவ்வளவு நன்றாகப் பாடும் மகாபுருஷனுடைய திருமுகத்தைப் பார்க்கவேண்டும்" என்று எண்ணித் திரையிலிருந்து எட்டிப் பார்த்தாள். அதே சமயத்தில் நாராயணசாமி ஐயர் அவள் முகத்தைப் பார்த்துவிட்டார். அந்த இடத்தில் பெண்பால் வந்தது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது. சந்திரனென்று கூறியது அவள் முகத்தைத்தான்.
நாராயணசாமி ஐயர் கூறியதைக் கேட்ட யுவரங்கர் அந்தத் தாஸியை வரவழைத்து அவளைப் பார்த்து, "இவர்தாம் இனி உனக்கு நாயகர். இவருக்குரிய கைங்கரியங்களை இவன் மனம் கோணாமல் செய்து மகிழ்ந்திரு; நீ மிக்க பாக்யசாலி" என்று சொல்லி விட்டு, "தாங்கள் இவளை ஏற்றுக்கொள்ளவேண்டும்" என்று விநயமாக ஸங்கீத வித்துவானிடம் தெரிவித்தார். அவருக்கு இன்னது செய்வதென்று தோன்ற வில்லை. அவர் மறுத்தற்கு அஞ்சி அவளை அங்கீகரித்துக்கொண்டார். பின்பு யுவரங்கர் அவருக்குப் பலவகை ஸம்மானங்களும் அவளுடைய பாதுகாப்பிற்காகத் தனியாகப் பொருளுதவியும் செய்தார்; அன்றியும் அவருக்கு, "பூலோக கந்தர்வர்" என்னும் பட்டத்தையும் அளித்தார். அது முதல் அவர் பெயர் பூலோக கந்தர்வ நாராயணசாமி ஐயர் என்று வழங்கி வரலாயிற்று. வித்துவான்களுடைய மனத்தை மகிழ்விப்பதில் யுவரங்கருக்கு ஒப்பாக வேறு யாரைச் சொல்லமுடியும் ?


தஞ்சாவூர் ஸமஸ்தான வித்துவான்களிற் பலர் யுவரங்கரிடம் வந்து இவ்வாறே தங்கள் ஆற்றலைக் காட்டிப் பரிசு பெற்று இன்புற்றுச் சென்றனர்; மைஸூர், திருவநந்தபுரம் முதலிய ஸம்ஸ்தானங்களிலி ருந்தும் பலர் வந்து சென்றனர்.


பூலோக கந்தர்வ நாராயணசாமி ஐயருடைய ஆசிரியர், 'விரிபோணி' வர்ணமென்று வழங்கும் பைரவி வர்ணத்தை இயற்றிய பச்சைமிரியன் ஆதிப்பையர் என்பவர். அவர் தஞ்சாவூர் ஸம்ஸ்தான வித்துவான்; சிறந்த கர்நாடக ஸங்கீத வித்துவான்கள் பலருக்கு ஆசிரியர்; ஸம்ஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, மகாராஷ்டிரம் என்னும் பாஷைகளிற் பல கீர்த்தனங்களை இயற்றியிருக்கிறார்.

யுவரங்கருடைய விருப்பத்தின்படி உடையார்பாளையத்துக்கு ஒருமுறை அவர் வந்தார்; அவருடைய ஞான விசேடத்தில் ஈடுபட்டுச் சிலநாட்கள் இருந்து அவர்மீது பல கீர்த்தனங்களை இயற்றினார். ஆதிப்பையர் அங்ஙனம் இயற்றிய கீர்த்தனங்களுள் நாட்டைக்குறிஞ்சி, சஹானா என்னும் இரண்டு இராகங்களில் உள்ள இரண்டு கீர்த்த னங்களைப் பிற்காலத்தில் அவருடைய பரம்பரையினராகிய புதுக்கோட்டை வீணை சுப்பையர் என்னும் ஸங்கீத வித்துவான் பாடக் கேட்டிருக்கிறேன். சிலநாட்கள் ஆதிப் பையர் உடையார்பாளையத்தில் இருந்து பலவகை உபசாரங்களைப் பெற்று மகிழ்ந்து யுவரங்கர் வழங்கிய பல ஸம்மானங்களையும் பெற்றுச் சென்றார். பின்பும் அடிக்கடி உடையார்பாளையம் வந்து யுவரங்கரை மகிழ்வித்துத் தாமும் மகிழ்ந்து செல்வது வழக்கம்.

அறச் செயல்கள்


யுவரங்கர் தெய்வபக்தியிற் சிறந்தவர். எல்லா மதத்தினர் பாலும் அன்பு பூண்டவர்; சமரச நோக்குடையவர். அவர் சிவவிஷ்ணு ஆலயங்களில் பலவகைத் திருப்பணி களைச் செய்திருக்கிறார்; உடையார்பாளையம், ஜெயங்கொண்ட சோழபுரம், கங்கை கொண்ட சோழபுரம் முதலிய தலங்களில் உள்ள சிவபெருமான் ஆலயங்களில் பல மண்டபங்களைப் புதுப்பித்தார்; புதிய திருப்பணிகளையும் செய்தனர்; அந்த ஸ்தலங் களிலும் ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீபூவராகப்பெருமாள் கோவிலிலும் நித்திய நைமித்திகங்கள் விதிப்படியே நடைபெறும்படி செய்வித்தார்; பல இடங்களில் அக்கிரஹாரங்களை அமைத்துப் பிராம்மணர்களுக்கு ஸர்வமானியங்களுடன் வீடுகளைத் தானம் செய்தனர்.

நல்லப்ப உடையார்

யுவரங்கருக்குப் பின்பு அவருடைய தம்பியாகிய நல்லப்ப உடையாரென்பவர் ஜமீன் ஆட்சியைப் பெற்றார். அவர் காலத்தில் அவருடைய அன்னையார் ஹிரண்ய கர்ப்ப மகாதானம் ஒன்று செய்தார். அந்த ஜமீன்தாரும் பலவகை ஆலய திருப்பணிகள் செய்தனர். அவருடை அறச் செயல்களையும் புகழையும் புலப்படுத்தி ஒரு புலவர் அவர் மீது பாடிய சிந்து ஒன்று உண்டென்பர். அவர் கிழக்கிந்தியக் கம்பெனியாருக்குப் பலவகையான உதவி புரிந்தார். நவாப்பிற்கும் பல ஸமயங்களில் உதவியாக இருந்தனர். அவ்விருவகையாராலும் அவர் பெற்ற ஊதியங்கள் பல.
நல்லப்ப உடையாருக்குப் பின்பு முத்துவிஜயரங்கப்ப உடையாரென்பவரும், அபிநவ யுவரங்கப்ப உடையாரென்பவரும் முறையே ஜமீன்தார்களாக விளங்கினர். பின்ன வருடைய காலத்தில் நவாப்புடைய தலைமை மாறி ஆங்கில அரசின் தலைமை உடையார்பாளைய ஜமீனுக்கும் வேறிடங்களுக்கும் அமைந்தது.

கச்சி ரங்கப்ப உடையார்

பின்பு 1801-ஆம் வருஷம் டிசம்பர் மாதம் முதல் தேதி கச்சிரங்கப்ப உடையார் என்பவர் ஜமீன்தாரானார். 1835-ஆம் வருஷம் ஆகஸ்டு மாதம் வரையில் அவருடைய ஆட்சி நடைபெற்றது.
அவர் தமிழ்ப்பயிற்சியும் ஸங்கீதத்தில் சிறந்த ஆற்றலும் உடையவர். கல்லாடத்தில் ஈடுபட்டுப் பலமுறை படித்தும் புலவர்கள் அதிலுள்ள நயங்களை எடுத்துக் காட்டக் கேட்டும் இன்புற்றார்; மற்ற நூல்களையும் பயின்றார். காவிரியின் தென்பாலுள்ளதும் தேவாரம் பெற்றதுமாகிய திருப்பராய்த்துறை என்னும் தலத்தில் கோடைக்காலத்தில் சிலமாதம் இருந்து வருதல் அவருக்கு வழக்கம்.
ஒரு வருஷம் அங்கே சென்றிருந்தபொழுது தஞ்சாவூரிலிருந்து வீணை பெருமாளை யரென்னும் ஒரு சிறந்த ஸங்கீத வித்துவான் வந்தார். அவர் மேற்கூறிய ஆதிப்பைய ருடைய சிஷ்யர்களில் ஒருவர். வீணை வாசிப்பதில் அவருக்கு இருந்த ஆற்றலை யாவரும் புகழ்ந்து வந்தனர்.
அவர் கச்சிரங்கர் பால் வந்தபொழுது பல ஸங்கீதவித்துவான்களும் தமிழ் வடமொழி வித்துவான்களும் ஜமீன்தாருடன் இருந்தனர். பெருமாளையர் அவருடைய ஸபையில் வீணை வாசித்தார். அது மிகவும் இனிமையாக இருந்தது. ஸங்கீதத்தில் வல்லவராகிய ஜமீன்தார் எதனையும் திடீரென்று பாராட்டுவதும் அவமதிப்பதுமாகிய இயல்பு இல்லாதவர். ஆதலின் வீணை வித்துவான் எவ்வளவோ இனிமையாகப் பாடியும், வாசித்தும் ஜமீன்தார் பாராட்டவில்லை; சிரக்கம்பமும் கரக்கம்பமும் செய்ய வேயில்லை. உடன் இருக்கும் வித்துவான்கள் தலைவர் எங்ஙனம் நடக்கிறாரோ அதனைப் பின்பற்றுவது தான் உசிதமாதலின் அசைவற்று இருந்தார்கள். வல்லவர் களும் அறிவு மிக்கவரும் ஸபையில் இருக்கும்பொழுது தாமாக இடமறியாமல் தலையை ஆட்டுவதும் கை கொட்டுவதும் சபாஷென்பதும் ஆகிய வழக்கங்களை உடையவர்களை அத்தகைய ஸபைகளிற் காணுதல் அரிது. மூன்று நாட்கள் பெருமாளையர் வீணை வாசித்தார்; பாடிக்கொண்டே வாசிப்பது அவர் வழக்கம்; பல ராகங்கள், கீர்த்தனங்கள், பல்லவி, ஸ்வரங்கள் முதலிய பல வழிகளில் அவர் தம் ஆற்றலைக் காட்டிக்கொண்டே வந்தார். மூன்று நாட்களிலும் ஜமீன்தார் சற்றும் தலை அசைக்கவேயில்லை. மூன்றாவது நாள் வாசித்து வரும்பொழுது பெருமாளை யருக்கு மனவருத்தம் உண்டாயிற்று. அவ்வருத்தத்தால், பாடிவந்த இராகத்துக்கு உரிய ஒரு ஸ்வரஸ்தானம் தவறியது. அதனை யாரும் கவனிக்கவில்லை. அந்த ஸமயத்தில் 'பேஷ்' என்று ஜமீன்தார் சொன்னார்.

பெருமாளையர் திடுக்கிட்டார்; உடனே வீணையைக் கீழே வைத்தார். "ஏன்? மேலே வாசிக்கலாமே" என்று ஜமீன்தார் சொன்னார். "எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்ற வில்லை. இந்த மூன்று நாட்களும் என்னுடைய சக்தியை யெல்லாம் காட்டி வாசித்தேன்; கல்லுங்கரையும் வண்ணம் பாடினேன். அப்பொழுதெல்லாம் துரைய வர்கள் சந்தோஷிக்கவில்லை. இப்பொழுது கொஞ்சம் தவறிவிட்டது. இந்த ஸமயத் தில் நீங்கள் சந்தோஷித்தீர்களே!" என்று வித்துவான் கூறினார். உடையார், "என் ஞானத்தைக் காட்டுவதற்குத்தான் சந்தோஷித்தேன். அன்றி இவ்வளவு நாளும் கூர்ந்து கவனித்து வந்தேனென்பதையும் இதனாலேயே நீங்கள் அறிந்து கொள்ளலாம். அநாவ சியமாக மனவருத்தத்தைக் கொடுத்ததற்கு க்ஷமிக்கவேண்டும்" என்று சொல்லிப் பாராட்டிப் பரிசுகள் வழங்கினார். வித்துவானும் அவருடைய ஞானத்தை அறிந்து பாராட்டினார்.

அந்த ஜமீன்தார் பெரிய திருக்குன்றம் கனம் கிருஷ்ணையருடைய பெருமையை அறிந்து தம்மிடத்துக்கு வரவழைத்து ஸமஸ்தான வித்துவானாக நியமித்துக் கொண்டார். அவர் மீது கனம் கிருஷ்ணையர் பாடிய சில கீர்த்தனங்கலும் சில பாடல்களும் உண்டு; அவற்றுள் ஒரு கட்டளைக்கலித்துறையின் ஒரு பகுதியாகிய, "கச்சிரங்கேந்த்ரன் சிரக்கம்பம் போதும்" என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது. கச்சி ரங்கர் காலத்தில் திருப்புறம்பயம் வீர சைவராகிய பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவி ராயரென்பவரும் சாருவாய் குமாரசாமிக்கவிராயரென்பவரும் ஸமஸ்தான வித்து வான்களாக இருந்தனர். திருவாவடுதுறையில் ஆதீன வித்துவானாக இருந்த கந்த சாமிக் கவிராயரென்பவர் உடையார்பாளையம் வந்து கச்சிரங்கரைப் பாராட்டி ஒரு கோவை பாடி அதற்காக மானியங்களைப் பெற்றார். அக்கோவையிலுள்ள ஒரு செய்யுள் வருமாறு:

(இறையோன் இருட்குறி வேண்டல்)

(கட்டளைக்கலித்துறை)

திருந்தார் கலிபுகுந்தேமீன்வரச்செய்து செங்கதிரோன்
விருந்தாகவேயெமைவிட்டான் தமிழுக்கு மிக்க நிதி
தருந்தாரு வாங்கச்சி ரங்க மகீபன் றடஞ்சிலம்பில்
கருந்தாழ் மழைக்குழலீருமக் கேயின்று காண்மின்களே."
கச்சிரங்கதுரை மீது வேறொரு புலவர் பிள்ளைத்தமிழொன்று பாடியுள்ளாரென்பர். அவர் விஷயமாக உள்ள தனிப்பாடல்கள் பல. அவற்றுள் பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவிராயர் பாடிய செய்யுட்களில் ஒன்று வருமாறு:

(வெண்பா)
"கல்லாடமேமுதலாக்கற்றுணர்ந்தாய் கல்வி பெற்றோர்
பல்லாடக் கூடுமோ பார்வேந்தே-சொல்லாடும்
கச்சிரங்க சாமியெனும் காலாட்கள் தோழாநீ
வச்சிரதே கம் பெற்று வாழ்."

கச்சிரங்கப்ப உடையாருக்குப் பின்பு முத்துவிஜயரங்கப்ப உடையார், ரங்கப்ப உடையார் என்பவர்கள் முறையே ஜமீன்தார்கள் ஆனார்கள்.

கச்சிக் கல்யாணரங்கர்

அவர்களுக்குப் பின்பு கச்சிக் கல்யாணரங்கரென்பவர் ஜமீன்தாரானார். 1842-ம் வருஷம் ஜூலை மாதம் முதல் 1885-ஆம் வருஷம் ஜூன் மாதம் வரையில் அவர் ஜமீன் ஆட்சியை நடத்தினார். அவரும் வித்துவான்களிடத்திற் பிரியமும் தர்மங்கள் செய்வதில் விருப்பமும் உடையவராக இருந்தார்.

அந்த ஜமீன்தார், கனம் கிருஷ்ணையரிடத்தில் மிக்க நட்புரிமை பாராட்டிப் பழகிவந்தார். அவருக்கு ஜமீன்தார், பல்லக்கும் குதிரையும் கொடுத்து அவ்வப்பொழுது வேண்டிய பொருளையும் அளித்துக் கெளரவித்து வந்தார். கனம் கிருஷ்ணையர் அந்த ஜமீன்தார் மீது பாடிய கீர்த்தனங்கள் பல. அவர் முதுமையினாலும் ஒருவகைப் பிணியினாலும் தேகத் தளர்ச்சியை அடைந்து தம்முடைய ஊருக்குப் போய் இருக்கவேண்டுமென்று எண்ணித் தம் விருப்பத்தை ஒரு கீர்த்தனத்தால் ஜமீன்தாருக்குப் புலப்படுத்தினார். அதனைக் கேட்ட ஜமீன்தார் அங்ஙனமே போய் இருப்ப தற்கு வேண்டியவாறு பொருளுதவி செய்து அனுப்பி னார்; பின்பும் கவலையில்லாமல் அவரைப் பாதுகாத்து வந்தார். கனம் கிருஷ்ணையருக்குப் பின்பு தாளப் பிரஸ்தாரம் சாமா சாஸ்திரிகளென்னும் பிரபல ஸங்கீத வித்துவானுடைய தாயாதியாகிய சுப்பராய ரென்பவரையும், அவருக்குப் பின்பு அந்த மரபினராகிய அண்ணாசாமி ஐயர் என்பவரையும் ஆஸ்தான வித்து வான்களாக நியமித்துக் கல்யாண ரங்கர் ஆதரித்து வந்தனர். அக்காலத்தில் பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவிராயரும் இருந்தார்.

கல்யாணரங்கர் செய்த நற்செயல்கள் பல. உடையார் பாளையம், மதனத்தூர், ஆநந்தவாடி என்னும் இடங்க ளில் அவர் அன்ன சத்திரம் கட்டுவித்தார். கொள்ளிடக் கரையிலுள்ள மதனத்தூர்ச் சத்திரத்தைக் கட்டிய காலத்தில் அதனைப் பாராட்டிக் கனம் கிருஷ்ணையர் பாடிய கீர்த்தனம் ஒன்று உண்டு. பாலசரஸ்வதி சுப்பிரமணியக் கவிராயர் அப்பொழுது பாடிய செய்யுள் வருமாறு:
"திருமால் மண் உண்ணாமல் சிவனும் நஞ்சைத்
தினாமல் செங்கமலப் பொகுட்டு வேதன்
உருமாறி யன்னமெனப் பறந்திடாமல்
உயர்மறையோர் வடிவின் வந்தே யன்ன முண்ணக்
க்ருமால்நேர் காதலக் கல்யாணரங்கக்
காலாட்கள் தோழமன்னர் கருத்து வந்தே
வருமாம தனத்தூரில் அன்ன சத்ரம்
வைத்திட்டாரெவரும் வந்து துய்த்திட்டாரே."


தத்தனூரில் பலவகைக் கனிவிருக்ஷங்களும் பூஞ்செடிகளும் நிறைந்து கண்ணுக்கு இனிதாக விளங்கும் பூஞ்சோலையொன்றைக் கச்சிக் கல்யாணரங்கர் அமைத்தார். அதனைப் பாராட்டித் தர்பார் இராகத்தில் கனம் கிருஷ்ணையர் ஒரு கீர்த்தனம் பாடியிருக்கிறார். கல்யாணரங்கதுரை ஸ்ரீமுஷ்ணம் பெஉர்மாளுக்கும், சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கும் தங்கக் கவசமும் சிதம்பரம் ஸ்ரீமூலட்டானேஸ்வரருக்கு ஸஹஸ்ரதாரா பாத்திரமும் செய்தளித்தார்; கும்பகோணம் ஸ்ரீசங்கராசாரியார் மடத்திற்குத் தேவமங்கலமென்னும் கிராமத்தில் 40 காணிநிலங்களை ஸர்வமானியமாக வழங்கினார்.

அவருடைய காலத்தில் கனம் கிருஷ்ணையர் பால் என் தந்தையாராகிய வேங்கட ஸுப்பையர் பன்னிரண்டு வருஷம் உடனிருந்து பணிவிடை செய்துவந்து ஸங்கீத அப்யாஸம் செய்தனர். அவரிடம் ஜமீன்தாருக்கு மிக்க பிரியம் உண்டு. என் தந்தையாருடைய தாயாருக்கும் கனம் கிருஷ்ணையர் அம்மான் ஆகவேண்டும். கச்சிக் கல்யாணரங்க துரையினுடைய பலவகை இயல்புகளையும் அவர் முன்னோர்களுடைய வரலாறு களையும் என் தந்தையார் அடிக்கடி எனக்குக் கூறியிருக்கின்றனர். மாதச் சம்பளம் கொடுத்து அவரை ஸமஸ்தான ஸங்கீத வித்துவானாக அந்த ஜமீன்தார் இருக்கச் செய்து சில வருடங்கள் ஆதரித்து வந்தார். கனம் கிருஷ்ணையரின் விருப்பப் படி என் தந்தையாருக்குப் பொருளுதவி செய்து திருமணம் செய்வித் தவர் அந்த ஜமீன்தாரே.


கல்யாணரங்கருக்குப் பின்பு கச்சி யுவரங்கப்ப உடையார், 1918-ஆம் வருஷம் அக்டோபர் மாதம் வரையில் ஜமீன்தாராக இருந்து புகழ் பெற்றார். பின்பு அவருடைய செல்வக் குமாரர்களும் உபகார சிந்தையுடைய வர்களும் ஆகிய மகாஸ்ரீ கச்சிச் சின்னநல்லப்ப காலாட்கள் தோழ உடையாரவர்கள் ஜமீன் தலைமையை வகித்துத் தம் முன்னோர்கள் ஒழுகிய வழியைப் பின்பற்றி நற்செயலும் நல்லறமும் புரிந்து விளங்கி வருகிறார்கள்.
உடையார்பாளையம் அரண்மனையிலிருந்து கிடைத்த "உடையார்பாளையம் ஜமீன் சரித்திரம்", "பயறணீச்சுரத் தலபுராணம்," "தனிப்பாடல்கள்", முதலியவற்றிலுள்ள செய்திகளையும் இளமை தொடங்கிப் பெரியோர்கள் பால் நான் கேட்டுவந்த செய்திகளையும் தொகுத்து இவ்வரலாறு எழுதப்பட்டது.
சேவிலுயரம்" எனத் தொடங்கும் இச்செய்யுள் சொக்கநாதப் புலவர் பாடியதாகத் தனிப்பாடற்றிரட்டில் காணப்படுகின்றது.
ஐயனார் மூக்கில் விரல் வைத்தல்- இந்நிகழ்ச்சியைப் பிறரோடு தொடர்பு படுத்திச் சொல்வதும் உண்டு.

அஜ்ஞாநாமவநீபு4ஜாமஹரஹஸ்ஸ்வர்ணாபி4ஷேகாத3பி-
ஞ்ஜாத: ஸ்ரீயுவரங்க3பூ4பதிமணே: ச்லாகை4வ ஸம்மாநநா |
ஸாராஸாரவிவேகசூந்யதருணீ ஸம்போ4க3 ஸாம்ராஜ்யாத:
ஸாரஜ்ஞேந்து3முகீ2விலோகநஸமுத்கண்டை2வயூநாம்முதே3 ||


கொன்றைவேந்தனை வைத்து எழுதப் பட்ட நீதி நூல் 

1. இச்செய்தியைச் சொன்னவர், இளமையில் எனக்குச் சுரிகை முதலியவற்றைக் கற்பித்த செங்கணம் விருத்தாசல ரெட்டியாரென்பவர்.