Saturday, February 11, 2012

காடவராயர்களின் ஆயுத தொழிற்சாலை- விழுப்புரம் மாவட்டம்




காடவராயர்களின் ஆயுத தொழிற்சாலை

பல்லவ வழித்தோன்றல்களான காடவராயர்கள் சேந்த நாட்டை 
(உளுந்தூர்பேட்டை அருகே) தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள். 
இவர்களில் கோப்பெரும் சிங்கன் என்பவன் சோழ, பாண்டிய 
மன்னர்களைவென்றவன். சோழ மன்னன் மூன்றாம் இராசராசனை 
சிறைப்பிடித்தான்என்பது வரலாறு.

போருக்கான ஆயுதங்களை தயாரிக்க சேந்தநாடு அருகே 
ஒல்லியாம்பாளையம், கன்னிக்குப்பம், தொப்பளாம்குப்பம் 
ஆகிய ஊர்களின் இரும்பு கனிமப் பொருள்களை செம்மண் 
கலயங்களில் இட்டு இரும்பை பிரித்து எடுக்கும் தொழிற்சாலை 
நிலுவியதை அறிய முடிகின்றது.

வெப்பம் தேவையான இத்தொழிலுக்கு  காற்றடிக்கும் 
துருத்துக்குழாய் பேருதவியாக இருந்துள்ளது. மிக 
அதிக வெப்பநிலையில் உருக்கப்படும்கனிமம், தீ
தேவைப்படும் பகுதியில் இணைக்கப்பட்டிருக்கும். 
சுடுமண் குழாய் முனைகளில் உருகிய சிதறிய இரும்பு 
எடுக்கப்பட்டுகருவிகள் வடிக்கப்படும்.

இத்தடயங்கள்  இப்பகுதியின் தரைக்கூட்டு பகுதியிலும் 
செம்மண்நிலப்பரப்பில் இரும்பு உருக்கு சுடுமண் 
பாத்திரங்களும்,பாத்திரங்களுடன் இணைக்கப்பட்ட குழாய்களும் 
சிதைந்த நிலையில்ஏராளமாக கிடைக்கின்றன.

கி.பி.13 ஆம் நூற்றாண்டின் தடயங்கள் என ஆய்வாளர்கள் 
எடுத்துரைக்கின்றனர்.