Thursday, December 19, 2013

தொண்டைமானாறு :






தொண்டைமானாறு :

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும் ..

தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம் .

இங்கே வந்த தொண்டைமான்  அரசன் யார் ?
அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ?
எப்போது இங்கு வந்தான் ?
வந்த தொண்டைமான்  அரசன் என்ன செய்தான் ?

போன்ற பல கேள்விகள் நமக்கு எழும் .

இதற்கான பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் " என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன் .

நூல் :தொண்டைமானாரும் செல்வச்சநிதியும்
ஆக்கியோன் : சே.நாகலிங்கம்

வெளியீடு :
வல்வை வரலாற்று ஆவண காப்பகம்
கெனடா

தாய்நாட்டுத் தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசர்கள் , தொண்டைமான் என்னும் பட்டதோடு ஆட்சி புரிந்ததை நாம் காண்கிறோம் .

இவர்களில் யாழ்பாணத்திற்கு வந்த தொண்டைமான் யார் என்பதே நமது கேள்வி ?

இதை பற்றி நன்கு ஆராய்ச்சி செய்த இலங்கை வரலாற்று வல்லுனரும் , ஆராய்ச்சியாளருமான "முதலியார் இராசநாயகம் " அவர்கள் ,

இங்கே வந்த தொண்டைமான் 11 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் , 12 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் சோழ சக்கரவர்த்தியாக இருந்த முதலாம் குலோத்துங்க சோழனின் பிரதம படை தலைவனாக இருந்த "கருணாகர தொண்டைமான்தான்" என்று கூறுகிறார் .

குலோத்துங்கனின் கலிங்க வெற்றியை கொண்டாடும் விதமாக , குலோத்துங்கன் அவைபுலவராய் இருந்த ஜெயங்கொண்டார் என்பவர் கலிங்கத்துபரணி என்னும் நூலை இயற்றி அதை அரசபையில் அரங்கேற்றினார் .

இந்த நூலில் ஜெயங்கொண்டார் அவர்கள் குலோத்துங்கனை புகழ்ந்து வாழ்த்து பாடிய பின் சோழ படைக்கு தலைமை தாங்கி , அந்த படையை கலிங்க தேசத்துக்கு நடத்தி சென்று கலிங்க போரில் வென்று கலிங்க தேசத்தை மீண்டும் சோழ பேரரசின் கீழ் ஒரு பகுதியாகிய கருணாகர தொண்டைமான் அவர்களை பின்வருமாறு புகழ்கிறார் .

தொண்டையார்வேந்தனைப் பாடீரே
பல்லவர் தோன்றலைப் பாடீரே
வண்டை வளம்பதி பாடீரே
மறைமொழிந்த பதி மரலில் வந்தகுல
திலகன் வண்டைநகர் ராசன்

இந்த புகழ் மாலைகளிளிருந்து தொண்டைமானின் முன்னோர் தொண்டைமண்டல அரசர்களாய் இருந்தார்கள் என்றும் , அவன் பல்லவ பேரரசர்களின் வழித்தோன்றல் என்றும் சோழநாட்டில் கன்னடனாட்டின் எல்லைக்கு அண்மையில் இருக்கும்  வண்டலூர் என்ற நகரை தலைநகராக கொண்டு அந்த பிரதேசத்தை ஆண்டு வந்த சிற்றரசன் என்பதும் தெரிய வருகிறது .

இவனுடைய முழுப்பெயர் "பல்லவராய திருவரங்க கருணாகர தொண்டைமான்" .திருவரங்க என்ற பெயரில் இருந்தும் , தமிழ்நாட்டில் காணப்படும் தொண்டைமான்களின் ஒரு சமஸ்கிருத கல்வெட்டில் இருந்தும் இவன் விஷ்ணு சமயத்தவன் என்பது உறுதியாகிறது .

###################

குறிப்பு :
 --------

கருணாகர தொண்டைமானை பற்றி பாடிய கம்பர் அவர்கள் ,"சிலைஎழுபது " என்னும் நூலில் ,கருணாகர தொண்டைமானின் குலமாகிய வன்னியர் பெருமையை பாடியுள்ளார் .

இதில் கருணாகர தொண்டைமானை பள்ளி நாட்டார்,வீர பண்ணாடர் , வன்னியர், சம்பு குலத்தவன், வன்னியர் எடுத்த வில்லே வில் என்றும், வீரக்கழல் தரித்தவன் என்றும் வர்ணிக்கிறார் .

அதே போல குலோத்துங்கன் மகன் விக்கிரம சோழனை

"அக்கினி குலத்து விக்ரமன் எடுத்த வில்லே "

என்றும் புகழாரம் சூட்டுகிறார் .

"குலத்தலைவர் படை சிறப்பு " என்னும் தலைப்பில் கம்பர்  கீழ்கண்டவாறு பாடியுள்ளார் .

குலத்தலைவர் படைச் சிறப்பு
 ======================

விடையுடையார் வரமுடையார்
வேந்தர்கோ வெனலுடையார்
நடையுடையார் மிடியுடைய
நாவலர்மாட் டருள்கொடையார்
குடையுடையார் மலையன்னர்
குன்றவர்பல் லவர்மும்முப்
படையுடையார் வனியர்பிற
ரென்னுடையார் பகரீரே.




சிலை எழுபது வன்னியரை மலையமன்னரெனவும் பல்லவரெனவும் வருணிப்பதுகவனித்தற்பாலது. சோழப்பெருமன்னர் காலத்திலே தொண்டைமண்டலத்திலாண்டகிழியூர் மலையமான்களையும் பல்லவமரபில் வந்த காடவ அரசர்களையுமே நூல்இவ்வாறு குறிப்பிடுகின்றது.
இக்குறுநில மன்னர் வன்னியரா யிருந்தமைக்குக்கல்வெட்டுச் சான்றுகள் ஆதாரமாயுள்ளன.

பிறகு "பரிசுதரற் சிறப்பு" என்னும் தலைப்பில் கீழ்கண்டவாறு பாடியுள்ளார் .

பரிசுதரற் சிறப்பு
============

அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்
தருள்வன் னியரை யாம்புகழ்ச்
செவிக்கா ரமுதமெனக் கேட்டுச்
சிந்தையுவந்து சீர்தூக்கிப்
புவிக்கா யிரம்பொ னிறைநீக்கிப்
பொற்றண் டிகபூடணத்தோடு
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்
கருணாகரத்தொண்டை வன்னியனே.


##################

இவன் யாழ்பாணத்திற்கு ஏன் வந்தான் என்பதை இப்போது ஆராய்வோம் .


முதலாம் குலோத்துங்கன் அரசு செய்த காலத்தில் முதலாம விசயபாகு என்பவன் இலங்கை அரசனாய் இருந்தான். அரசியல் காரணங்களுக்காக இவர்களுக்கு இடையில் பகை தோன்றியது. இந்தப் பகையின் காரணமாக விசயபாகு தன்னுடன் தனி யுத்தத்திற்கோ படைகளைக் கொண்டு செய்யும் யுத்தத்திற்கோ வரும்படி குலோத்துங்கனுக்குச் சவால் விடுத்தான், என்று சிங்கள வரலாற்று நூலாகிய மகாவம்சம் கூறுகிறது.

இந்தச் சவாலை ஏற்ற குலோத்துங்கன் தனது பிரதம படைத் தலைவனாகிய தொண்டைமானை ஒரு படையுடன் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பினான். இதுவே தொண்டைமான் யாழ்ப்பாணத்துக்கு வந்ததற்கு உண்மைக் காரணம். இது தவிர, தொண்டைமான் இங்கே வந்து யாழ்ப்பாண அரசனை போரில் வென்று யாழ்ப்பாணத்தைச் சோழப் பேரரசின் ஒரு பகுதியாக்கினான்.

அதன் பின் இந்நாட்டை அரசு செய்வதற்கான ஒழங்குகளைச் செய்து இந்த நாட்டின் பாதுகாப்புக்காக, இப்போது தொண்டைமானாறு என்று விளங்கும் இடத்தில் ஒரு படைத் தளத்தையும் அமைத்து இந்தப் படைகளின் தலைவர்களாகத் தன்னுடைய உறவினர்களான கங்க, பல்லவராச வம்சங்களைச் சேர்ந்தவர்களையே நியமித்து அவர்களைத் தொண்டைமானாற்றில் குடியேற்றி வைத்தான்.

தொண்டைமான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில் இங்கே விளையும் உப்பு தன்னுடைய நாட்டுக்குத் தேவையாக இருந்தபடியால் அதைச் சேகரித்து மரக்கலங்கள் மூலமாக அங்கே கொண்டு செல்வதற்கு வேண்டிய ஒழுங்குகளைச் செய்தான். தொண்டைமான் காலத்திலும் பின் வந்த ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலும் தொண்டைமானாறு ஒரு படைத்தளமாய் இருந்தது என்பதற்கு வாழும் குடும்பங்களில் தாய்மார்கள் பாடும் தாலாட்டுப் பாட்டுக்களில் இருந்தும், இங்கே உள்ள காணிப் பெயர்களில் இருந்தும் நாம் காணக் கூடியதாய் உள்ளது.

சில குடும்பங்களிலிருக்கும் தாய்மார்கள் பாடும் தாலாட்டுப் பாடலில் பின்வரும் வரிகள் காணப்படுகின்றன.

“கைக்கோ கனக வள்ளி
காலுக்கோ வீரதண்டை
தண்டையுமோ பொன்னாலே
தாழ்வடமோ முத்தாலே “
---
---
###  என்றும் இறுதியில் பின்வருமாறு பாடுவார்கள்.  ###

“என் பட்டதுரையே
படைமுகத்தின் இராசாவே
நீ போருக்குச் சென்றிடுவாய்
பொழுதோடே வென்றிடுவாய்
வென்ற களரியிலே
வீரபட்டம் கூட்டிடுவாய் “

போர்க்களத்துக்குச் செல்லும்போது வீரக்கழல் அணிந்து செல்வது சத்திரியர்களின் வழக்கம்.

இந்த வழக்கம் தொண்டைமானாற்றில் இருந்து நெடுங்காலத்திற்கு முன்வே மறைந்துவிட்டது . ஆனால் தொண்டைமானாற்றின் அயலூராகிய வல்வெட்டி துறையில் இன்றைக்கும் ஏறக்குறைய 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை நீடித்திருந்தது .

தொண்டைமானாற்றிலுள்ள காநிகளிர் சில பின் வரும் பெயர்களை கொண்டிருன்கின்றன

1.அத்திப்பட்டை ஆண்டவன் கொல்லை
2.நாயினிச்சியார் கொல்லை
3.சேதுபதியர் கண்டு
4.பணிக்க வளவு

யாழ்ப்பான கச்சேரியில் இருக்கும் தொண்டைமானாற்றில் தோம்பு ஏடுகளில் இக்காணி பெயர் களையும் ஆண்களில் பெயர்களையும் தொண்டைமானற்றை பற்றி பல வரலாற்று விபரங்களை பெற்று கொள்ளலாம் ..

அத்திப்பட்டை ஆண்டவன் கொல்லை என்பது யானை படைத்தலைவன் வாழ்ந்த இடம் .


 நாயினிச்சியார் கொள்ளை:

நாயன் என்பது வன்னியர் படைத்தலைவனின் பட்ட பெயர்  . நாயினிச்சியார் கொள்ளை என்றால் வன்னியர் படைத்தலைவன் ஒருவனின் மனைவி வாழ்த்த இடம்.

சேதுபதியார் கண்டு என்பது சேதுபதிக் கண்டர் வாழ்ந்த இடம் கண்டர் என்பதும் வன்னிய படை தலைவர்களின் பட்டப் பெயர்களில் ஓன்று இராக்கா வளவு இந்த வளவில் இராக்கா என்னும் பெயருடைய படைத்தலைவர்கள் தலைமுறையாக வாழ்ந்து வந்ததாக தெரிகிறது .இராக்காபனை என்று சொல்ல படும் இந்த வளவு தொண்டை மாணற்று பாலத்தின் கிழக்கு தலைப்பிலிருந்து ஏறக்குறைய 75 யார் தூரத்தில் செல்வச் சந்திதிக்குப் போகும் பாதையில கிழக்குப்பக்கமாக அமைந்திருக்கின்றது, இந்த இடத்தில் தான் ஆற்றின் மேற்க்குக்கரையில் ஆற்றை கடக்கும் இடம் அமைந்திருந்தது ஆற்றைக் கடந்த அரசக்கோட்டமாக இருந்த வடமராட்சிக்கு செலலும் யாவருக்கும் இராக்கா குடும்பத்தை சேர்ந்த ஒரு உத்தியோகிஸ்தரால் பரிசோதிக்கப்ட்ட பின்னரே மேலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இராக்க என்ற பெயரைக் கொண்ட பலர் இலங்கை அரசர்களாக இருந்த விக்கிரமவாகு, முதலாம பராக்கிரமபாகு ஆகியோரின் கீழ் படைத்தலைமை பன்டிரந்தனர் எனவும் படைகளில் அவர்கள் வகித்த பதவிகளையும் மகாவம்சம் விபரமாக கூறுகின்றது.

பணிக்க வளவு:   இது பணிக்கர் எனப்பட்ட ஒரு குடும்பத்தினர் வாழ்ந்த இடம் இந்த வளவு தொண்டை மானற்றில் பிரபல்யம் பெற்ற இடங்களில் ஒன்று பணிக்கக் கிணறு என மக்காளால் சொல்லப்படும் கிணறு ஒன்று இருக்கிறது .

இந்தக்கிணறும் தொணடைமனாற்றிலுள்ள கிணறுகளில் மிகவும் பிரசித்த பெற்ற மூன்று நான்கு கிணறுகளில் ஒன்றாகும். பணிக்கரென்ன பெயரின் பொருள் பேராசிரியர் என்பதேயாகும். அந்தப்பெயர் வாள் வித்தையிலா திறமை பெற்ற பேராசிரியரையே அதிகம் குறிக்கும்.

 எத்தனையோ படைத் தலைவர்கள் வாழ்ந்த தொண்டைமானற்றில் அவர்களுக்கு வாள்வி்தை கற்பிப்பதற்காக அந்த வித்தையில் திறமை பெற்ற பேராசிரியர்களை கொண்ட ஒரு குடும்பம் இங்கிருந்தது. ஆச்சரியப் படத்தக்கது ஒன்றல்ல.

இங்கே நாம் சிங்கள வரலாற்றில் உள்ள ஒரு சம்பவத்தை கவணிப்போம், மலை நாட்டிலிருந்து வந்த வாள் வித்தையில திறமை பெற்ற பணிக்கன் என்ற ஒருவன் சிங்கள அரசனாகிய பராக்கிரமபாகுவிடம் சென்று தான் பெற்றிருந்த திறமையை காட்டினான் என்றும் அதைக்கண்ட அரசன் தன் குடும்பத்தில் இருந்த ஒரு அரசகுமாரியை அந்த பணிக்கனுக்கு விவாகம் செய்து கொடுத்தானென்றும் மகாவம்சம் கூறுகின்றது.

இந்த பணிக்கனுக்கும் சிங்கள ராஜகுமாரிக்கும் பிறந்த மகனை சிங்களத்தில் "சப்புமால் குமாறாய" என்றும் தமழில் "செண்பகப் பெருமாள்" என்றும் அழைக்கப்பட்டான். அவன் இளைஞனாக இருந்தபோதே யாழ்பானம் மீது படையெடுத்து வந்து அப்போ நாட்டின் அரசனாய் இருந்த கணகசூரிய சிங்கை ஆரியனை வென்று சிலகாலம் யாழ்ப்பானத்தை அரச செய்திருந்தான்.


பின்னர் இவன் யாழ்ப்பான அரசின் தலைநகராய் இருந்த சிங்கபுரம் என்ற நகரை அழித்து நல்லூரை புதிய தலைநகராக்கி அங்கே கந்தசாமி கோவிலையும் கட்டுவித்தான். பின்னர் புவனேகவாகு என்ற பெயருடன் இலங்கையரசனானான் மலைநாட்டிலிருந்து வந்தவனைன்று சொல்லப்பட்ட இவனது தந்தையாகாய பணிக்கன் தொண்டைமானாற்றில் இருந்து தான் சிங்கள நாட்டுக்குச் சென்றான் என்று எண்ணக்கூடியதாய் இருக்கின்றது



நன்றி :
=====

நூல் :தொண்டைமானாரும் செல்வச்சநிதியும்
ஆக்கியோன் : சே.நாகலிங்கம்


வெளியீடு :
வல்வை வரலாற்று ஆவண காப்பகம்
கெனடா


கருணாகர பல்லவ தொண்டைமானை பற்றி சில செய்திகள்  :



Sunday, November 10, 2013

"பல்லவர்கள் தமிழர்கள் - சத்ரியர்கள் - வன்னியர்கள் " - தொல்லியல் ஆய்வாளர் நடன.காசிநாதன்


"பல்லவர்கள் தமிழர்கள் - சத்ரியர்கள் - வன்னியர்கள் "
 என்ற தலைப்பில் தொல்லியல் ஆய்வாளர் நடன.காசிநாதன் அவர்கள்  வரலாற்று ஆசிரியர் என்.சுப்பிரமணியம் எழுதிய "social and cultural history of tamilnadu" என்ற நூலின் உதவியுடன் பல்லவர்களை பற்றிய அனைவரின் கேள்விக்கும் விடை அளித்துள்ளார்.