Saturday, February 11, 2012

வன்னிய வீரா்களில் தற்பொழுது போதி தர்மன்...




திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக புதைக்கப்பட்ட வரலாற்றுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள்

தற்பொழுது திரையரங்குகளில் வெற்றிகாரமாக திரையிடபட்டுள்ள 7-ம் அறிவு படத்தின் ம் சாதனைகள்..

மறைக்கப்பட்ட வன்னிய பல்லவ அரசாங்கத்தின் கந்தவா்மன் அவா்களின் புதல்வர் போதி தர்மன் அவர்களுடைய வரலாற்றை இவ்வுலகிற்க்கு அளித்த தயரிப்பாளர் திரு உதயநிதி ஸ்டாலின், இயக்குனர் முருகதாஸ் மற்றும் படக்குழுவினருக்கு வன்னிய மக்கள் சார்பாக கோடன கோடி நன்றிகள்....


கிபி 5-ம் நூற்றாண்டில் பல்லவ சாம்ராஜ்யத்தில் கந்தவர்மன் என்
 மன்னனின் மூன்றாம் மகனாகப் பிறந்தவர் இந்த போதி தர்மன். 

காஞ்சிபுரத்தில் பிறந்து, பின்னர் புத்த மதத்தைத் தழுவியவர். 
புத்த மத குருவாக மாறியபிறகு, சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி, 
அங்கே மகாயான புத்த வம்சத்தைப் பரப்பியதாகவும், 150 ஆண்டுகள் அங்கே
 உயிரோடு இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.

ஷோலின் குங்ஃபூ என்ற உலகின் மிகச் சிறந்த தற்காப்புக் கலையை நிறுவியரே இவர்தான் என்கிறது வரலாறு. இதற்கான கல்வெட்டு சீனக் கோயிலில் இன்றும் உள்ளது.

புத்த மதத்தில் உள்ள 28 குருக்களில் கடைசி குரு போதிதர்மர் என்ற இந்த தமிழன்தான் என்பதை பல வரலாற்று ஆசிரியர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். செயற்கரிய பல செயல்களைச் செய்து ஆச்சரியத்தில் மூழ்கடித்தவராம் இந்த போதி தர்மர்.

அதுமட்டுமல்ல, அவர் கால் தடம்பதியாத நாடுகளே இல்லையாம். இதை அவரது குறிப்பிலிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. கடல்வழியாக இந்தோனேஷியா,ஜாவா, சுமத்ரா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதிலும் போதி தர்மன் மகாயானத்தைப் பரப்பியுள்ளார்.

போதிதர்மன் மரணமடைந்து, அவர் உடல் எரிக்கப்பட்டதாக சீனாவின் ஷோலின் வம்ச அரசன் நம்பிக்கொண்டிருந்தபோது, போதியோ உயிருடன் 'பாமீர் முடிச்சு'பிரதேசத்தில் ஒற்றை காலணியை சுமந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்ததை சீன அமைச்சர் நேரில் கண்டாராம். அவரிடம் விசாரித்த போது, நான் என் சொந்த ஊருக்குப் போகிறேன், என்று கூறிவிட்டுச் சென்றாராம் போதி. அவர் மீண்டும் உயிர்த்து எழுந்துவிட்டதை, ஷோலின் கோயிலின் குருக்களும் உறுதி செய்தார்களாம்... 


 புத்த மத குருவாக மாறியபிறகு சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட போதி
 தர்மா அங்கே மகாயான புத்த வம்சத்தைப்பரப்பியதாகவும் 
150 ஆண்டுகள் அங்கே உயிரோடு
இருந்ததாகவும் சீன வரலாறு கூறுகிறது.சென் புத்தமதத்தை 
சீனாவிற்கு கொண்டு சென்ற புகழ் இவரையே சாரும்.
போதி தருமன் சீனாவில் ஷாலின் குங்ஃபூ
என்னும் தற்காப்புக் கலையை அறிமுகப்படுத்தியவர் 
எனக் கருதப்படுகிறார்.
குங்ஃபூவும் போதிதர்மனும்
போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் கொண்டு 
சென்ற பல்லவ அரச குலத்தவர் என நிறுவுவோர் 
பின்வரும் சான்றுகளை முன் வைக்கின்றனர்.
1.கல்வெட்டு சான்று
சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school) உள்ள 
கல்வெட்டுதென்னிந்திய புத்தத்துறவி போதிதர்மா
உருவாக்கிய தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.
2.டான்லின் பதிவுகள் (Tánlín)
டான்லின் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் 
பல்லவ பேரரசரின் மூன்றாம் மகன் என்கிறது.
3.டௌசுவான் பதிவுகள் Dàoxuān
டௌசுவான் பதிவுகள் போதிதர்மா தென்னிந்தியப் 


பல்லவன் என்கிறது.


(南天竺婆羅門種 nán tiānzhú póluómén zhŏng).
4.பௌத்த காஞ்சி கோயில்
தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் உள்ள 
தற்காப்புக்கலை சிற்பங்களில் தற்காப்புக்கலை 
மூல அசைவுகள் எப்படிபிறந்ததென்றுள்ளது.
5.ப்ராஃடன் கூறுவது
ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை 
காஞ்சியை தலைநகராகக்கொண்ட தமிழ்ப்பல்லவ 
பேரரசின் இளவரசர்என்கிறார்.
6.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது
அக்காலச்சீனாவில் எந்த துறவி சீனா வந்தாலும் 
அவரை பெர்சியர்என்றெண்ணி விடுவதால்
Yáng Xuànzhī (波斯國胡人 bō-sī guó hú rén) போதி 
தர்மாவை பெர்சியரெனக் கூரியதைமறுக்கிறார்.
7. தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் 
உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில் 
தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி
பிறந்ததென்பதை சீன சப்பானிய 
தற்காப்புக்கலை ஆசிரியர்கள் 
பார்த்துச்செல்கின்றனர்.
போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்
கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனென 
அறியப்படுகிறது
அக்கால பல்லவமரபினர் கடைமகனை புத்தமட தானம் 
அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென 
அறியப்படுவோர்
1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா) (பௌத்தவர்மப் பல்லவன்)
11. கால ஒற்றுமை
1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) 
கந்தவர்மன் IV-ன் காலமாக அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக 
கருதப்படுவது (சாக்கியமுனி முதல் (கி.மு.563) 
போதிதர்மா வரை (கி.பி.550).
மேற்கூரிய காலங்கள் அனைத்தும் கூடி 
வருவது கால ஒற்றுமை.
 குங்ஃபூவும் போதி தருமனும்

போதி தருமன் ஷாலின் குங்ஃபூவை சீனத்துக்குக் 
கொண்டு  சென்ற பல்லவ அரச குலத்தவர்
என நிறுவுவோர் பின் வரும் சான்றுகளை 
முன் வைக்கின்றனர்.

1.கல்வெட்டு சான்று

சீனக்கோயிலில் (shoalin temple - kungfu school)
 உள்ள  கல்வெட்டுதென்னிந்திய
புத்தத்துறவி போதிதர்மா  உருவாக்கிய 
தற்காப்புக்கலையே குங்ஃபூ என்கிறது.

2.டான்லின் பதிவுகள் (Tánlín)

டான்லின் பதிவுகள் போதிதர்மா
 தென்னிந்தியப் பல்லவ பேரரசரின் மூன்றாம் 
மகன் என்கிறது.

3.டௌசுவான் பதிவுகள் 

டௌசுவான் பதிவுகள் போதிதர்மா 
தென்னிந்தியப்  பல்லவன் என்கிறது
4.பௌத்த காஞ்சி கோயில்

தற்போதும் பௌத்த காஞ்சி கோயிலில் 
உள்ள தற்காப்புக்கலை சிற்பங்களில்
தற்காப்புக்கலை மூ அசைவுகள் 
எப்படி பிறந்ததென்றுள்ளது.
5.ப்ராஃடன் கூறுவது

ப்ராஃடன் என்னும் ஆய்வாளர் போதிதர்மாவை 
காஞ்சியை தலைநகராகக் கொண்ட 
தமிழ்ப்பல்லவ பேரரசின் 
இளவரசர் என்கிறார்.
6.யொங்சியா பாட்டு  

யொங்சியா என்னும் பாட்டு 28 குருமார் 
வரிசையைக் கூறுகிறது
(சாக்கிய முனிமுதல் போதிதர்மா வரை)

7.ப்ராஃடன் Yáng Xuànzhī பதிவை மறுப்பது
அக்காலச் சீனாவில் எந்த துறவி சீனா 
வந்தாலும்அவரை பெர்சியர் என்றெண்ணி 
விடுவதால், Yáng Xuànzhī ( bō-sī guó hú rén) 
போதி தர்மாவைபெர்சியரெனக் 
கூரியதை மறுக்கிறார். 

8. 
தற்போது பௌத்த காஞ்சி கோயிலில் 
உள்ள  தற்காப்புக்கலை சிற்பங்களில்
தற்காப்புக்கலை மூல அசைவுகள் எப்படி
 பிறந்ததென்பதை சீன சப்பானிய தற்காப்புக்கலை
ஆசிரியர்கள் பார்த்துச்செல்கின்றனர்.

9. போதிதர்மா (பௌத்தவர்மப் பல்லவன்
கந்தவர்மன் IV-னின் மூன்றாம் மகனெனஅறியப்படுகிறது
அக்கால பல்லவ மரபினர் கடைமகனை புத்தமட 
தானம் அளித்துவிடுவர்.
கந்தவர்மன் IV-னின் மூன்று மகன்களென 
அறியப்படுவோர்

1.நந்திவர்மன் I
2.குமாரவிஷ்ணு II
3.புத்தவர்மன் (போதிதர்மா
(பௌத்தவர்மப் பல்லவன்)
10. கால ஒற்றுமை

1. போதிதர்மாவின் காலமென பதிவுகள் 
     கூறுவது (கி.பி.475-550)
2.விஷ்ணுகோபனின் காலத்திலிருந்து (கி.பி. 340) 
   கந்தவர்மன் IV-ன் காலமாக
அறியப்படுவது (கி.பி.450-500).
3.28 குருமார் வரிசையின் காலமாக 
கருதப்படுவது 
(சாக்கியமுனி முதல் (கி.மு.563)போதிதர்மா  வரை (கி.பி.550). 
மேற்கூரிய காலங்கள் அனைத்தும்
 கூடி வருவது காலஒற்றுமை.

வன்னிய குல க்ஷத்ரியர்கள் ஆட்சி செய்த சில பாளையங்களும் அவர்களின் பட்டங்களும்.



செய்தியை அளித்த அ. கார்த்திக் சம்புவராயர் அவர்களுக்கு நன்றி 

1. பிச்சாவரம் -   புலிக்குத்தி புலிவாயில் பொன்ணூஞ்சலாடிய வீரப்ப      சூரப்பசோழனார்.
2. முகாசா பரூர் -   கச்சிராவ் ( கச்சிராயர்)
3. அரியலூர் –   மழவராயர்
4. உடையார் பாளையம் -   காலாட்கள் தோழ உடையார்.
5. ஊத்தங்ககால் -  பரமேஷ்வர வன்னிய நயினார்.
6. கீழூர் - பாஷா நயினார்
7. செஞ்சி - வாண்டையார், முதன்மையார்(முதலியார்)
8. காட்டகரம் - கெடியரசு பெற்ற கெங்கையாதிபதி சென்னாமலை கண்டியத் தேவர்.
9. விளந்தை – வாண்டையார், கச்சிராயர்
10. பெண்ணாடாம் – கடந்தையார்
11. குன்ணத்தூர் – மழவராயர்
12. ஈச்சம் பூண்டி - கண்டியத் தேவர்.
13. பிராஞ்ச்சேரி - நயினார்
14. தத்துவாஞ்ச்சேரி – சேதுபதி
15. நெடும்பூர் – வண்ணமுடையார்
16. கடம்பூர் – உடையார்
17.ஓமாம்புலியூர் – வண்ணமுடையார்
18. குண வாசல் – வண்ணமுடையார், உடையார்
19. மோவூர் - ராய ராவுத்த மிண்ட நயினார்.
20. நந்திமங்கலம் பூலாமேடு – மழவராயர்
21. கிளாங்காடு - சேதுவராயர்
22. கல்லை – நயினார்
23. நயினார் குப்பம் - காங்கேய நயினார்
24. திருக்கணங்கூர் - கச்சிராயர்
25. தியாகவல்லி நடுத்திட்டு – கச்சிராயர்
26. ஆடூர் - நயினார்
27. மேட்டுப் பாளையம் ( சுண்ணாம்பு குழி) – பல்லவராயர்
28. சோழங்குணம் – முதன்மையார்
29. வடக்குத்து - சமஷ்டியார்
30. வடகால் - ராய ரவுத்த மிண்ட நயினார்
31. ஓலையாம்புதூர் - வண்ணமுடையார், கச்சிராயர்
32. மயிலாடுதுறை - அஞ்சாத சிங்கம்
33.முடிகொண்ட நல்லூர் – உடையார்
34. கடலங்குடி - ஆண்டியப்ப உடையார்
35. வடுவங்குடி - ஆண்டியப்ப உடையார்
36. கு றிச்சி - உடையார்
37. செல்லப்பன் பேட்டை – சோழனார்
38. சோத்தமங்கலம் - வாண்டையார்
39. கோடாங்க்குடி – சம்புவராயர்
40. சென்னிய நல்லூர் - சம்புவராயர்
41. கீழ்அணைக்கரை - வாண்டையார், உடையார்
42. இடைமணல் – நயினார்
43. சுவாமிமலை – தொண்டைமான்
44. சிவகிரி - பாண்டிய வன்னியனார்
45. அளகாபுரி – ரெட்டைக்குடையார்
46. ஏழாயிரம் பண்ணை - ஆண்டுக் கொண்டார்
47. விடால் – நாயக்கர்
48. பன்ணீராயிரம் பண்ணை - கட்டிய நயினார்
49. கருப்பூர் - படையாட்சியார்
50. கார்க்குடி – படையாட்சியார்

(to be continued...)


- அ. கார்த்திக் சம்புவராயர்

கச்சிராயர்கள்






தகவலை வழங்கிய சொந்தம் : திரு. ஸ்வாமி அவர்கள்

காஞ்சியை தலைநகராக கொண்டு ஆண்ட பல்லவ மன்னர்களின் வம்சத்தினர் காஞ்சிராயர்(கச்சிராயர்).

நமது வன்னிய இனத்தில் மிகுந்த வலிமையுடன் திகழ்ந்தவர்கள் கச்சிராயர்கள்.

கச்சிராயர்கள் பற்றி முக்கியமானவற்றை மட்டும் இப்போதைக்கு குறிப்பிடுகிறேன்.

இவர்கள் வேறு யாருமல்ல வீர மிகு அரசனான காடவராயன் கோப்பெருஞ்சிங்கனின் வழித்தோன்றல்கள்.கோப்பெருஞ்சிங்கனின் சந்ததியினர்.இதற்கு அசைக்கமுடியாத ஆதாரங்கள் உள்ளன.

நான் சில வரலாற்று நூல்களை ஒப்பிட்டுப் பார்த்து சில தகவல்களை உறுதிப்படுத்திக்கொண்டேன்.

அதாவது

பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின்போது காடவராயர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. இறுதியாக பெரு நிலப் பரப்பை ஆட்சி செய்த இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனோடு காடவராயர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

சரி அப்போது காடவராயர் ஆட்சி மறைந்த பிறகு அவர்கள் ஆட்சி செய்த பகுதிகள் என்னவாயின?யார் அவற்றை ஆண்டார்கள்?விடையும் கிடைத்தது.

ஆம் கோப்பெருஞ்சிங்கனின் மறைந்த பின்னர் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் ஆட்சியாளர்களாயினர்.

எங்கெல்லாம் கச்சிராயர் ஆண்டனர்?

கோப்பெருஞ்சிங்கனது செல்வாக்கு வட தஞ்சை வரை பரவியிருந்தது செய்தி. எனவே இம்மன்னன் ஆட்சி செய்த நிலப்பகுதிகளில் கச்சிராயர்கள் பலர் சிறு ஆட்சியாளர்களாக ஆனார்கள்.

காடவராயர் எப்படி கச்சிராயர் ஆனார் என்ற வினா தோன்றும் .இல்லையாகாடவராயர்களுக்கு கச்சிராயர் என்ற குல பட்டப்பெயரும் உண்டு.

சிறந்த மன்னனான காடவராயன் கோப்பெருஞ்சிங்கனின் தந்தையார் ஒரு கச்சிராயர்தான்.

இனி பாண்டியர் காலத்தில் காடவராயர் அரசு முடிவுக்கு வந்த பின்னர் என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம்.

மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் கல்வெட்டின் மூலம் அறியப்படுகிறார் ஒரு கச்சிராய குறுநில மன்னர்.

"பருவூர் உடையார் தேவர் கச்சிராயர் பிள்ளைகளில் காளத்திரிநாதர்" என்பவர் அறியப்படுகிறார்.(கி.பி 1313 ஆம் ஆண்டு)

அதன் பின்னர் விருத்தாச்சலத்தில் உள்ள சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டொன்றில் (கி.பி. 1360)

"இருங்கோளப்பாடி நாட்டுப் பருவூருடையான் தேறையராயன் பொன் வழங்கினான் மகன் கட்டி தேவனான சுந்தர்ப் பாண்டிய கச்சிராயன்"

என்ற குறுநில மன்னர் அறியப்படுகிறார்.

இவர்களே ஆண்ட பருவூர் தான் பின்னர் முகாசா பரூர் ஆகியது. இவர்களே முகாசா பரூரை ஆண்ட கச்சிராயர்கள் ஆவார்கள்.

கச்சிராயர்களுள் வலிமை மிக்கவர்கள் பரூர் கச்சிராயர்கள்தான்.

இப்போது இக்கச்சிராயர் வழி வந்த திரு.பாலதண்டாயுதபாணி கச்சிராயர் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் முக்கிய கோவில்களுள் ஒன்றான கோனான்குப்பம் மாதா கோவில் முதலில் ஒரு சிறு கோலிலாக இக்கச்சிராய மன்னரால் எழுப்பப்பட்டது. பின்னர் இங்கு வந்த வீரமாமுனிவர் கி.பி 1720 இல் பெரிய கோவிலாக இதனைக் கட்டியுள்ளார்.

பரூர் கச்சிராயர்கள் வம்சாவளிப் பட்டியல் ஒன்றும் உண்டு.

பரூர் கச்சிராயர்களைப் போல வலிமையான இன்னொரு வன்னியர் குல கச்சிராயர் விளந்தை கச்சிராயர் ஆவார். விளந்தை என்பது இன்றைய ஆண்டிமடத்தைச் சேர்ந்த ஒரு பகுதியாகும்.

விளந்தையை ஆண்டகச்சிராயர் பற்றியும் குறிப்புகள் உள்ளன. அவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்களுள் ஒருவர்தான் "வெட்டுங்கை அழகிய கச்சிராயர்" என்பவர்.

இவர்களைத் தவிர திருக்கனங்கூர்தியாகவல்லி,ஓலையாம்பூதூர் ஆகிய பகுதிகளிலும் கச்சிராயர்கள் பாளையக்காரகளாக விளங்கினர்.

இவர்கள் அனைவரும் வன்னிய குலத்தினராவர்.

பருர்(முகாசா) கச்சிராயர்கள் முதலில் குறுநில மன்னர்களாகவும்,விஜயநகர பேரரசின் காலத்தில் ஆட்சியாளர்களாஅகவும் பின்னர் நாயக்கர்(நாயுடு) ஆட்சியின்போது பாளையக்காரகளாகவும். அதன் பின்பு ஜமின்ந்தாராகவும் தொடர்ந்து இப்பகுதியை ஆட்சி செய்து வந்துள்ளனர்.

இக்கச்சிராயர் பரம்பரையில் இன்று அறியப்படுபவர்கள் திரு.பாலதண்டாயுதபாணி கச்சிராயர்திரு.ரமேஷ் கச்சிராயர் என்பார்.

பரூர் கச்சிராயர் பற்றி அறிய முடிந்தது.சரி. விளந்தை கச்சிராயர்கள் என்னவாயினர்?

இப்போதும் விளந்தைப் பகுதியில் கச்சிராயர் மரபினர் உள்ளனர்.

சரி விளந்தை கச்சிராயர்கள் பரூர் கச்சிராயர் போன்று நெடுங்காலம் ஆட்சி செய்தனரா?பார்ப்போம்.

விளந்தையில் கச்சிராயர் ஆட்சி கி.பி 17 ஆம் நூற்றாண்டளவிலும் இருந்தது.கி.பி 18 ஆம் நூற்றாண்டளவில் கச்சிராயர் ஆட்சி முடிந்தது. ஏன்?

கி.பி 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விளந்தையின் ஆட்சி மாறியது.வன்னிய ஆட்சியாளர் குடியினரான ஒரு சாரார் (வாண்டையார்) ஆட்சி பொறுப்பை ஏற்றனர்.

எனவே கி.பி 18 ஆம் நூற்றாண்டில் விளந்தையில் வாண்டையார்கள் ஆட்சி தொடங்கியது.
இவர்களும் வன்னிய குலத்தவரே. பிச்சாவரம் சோழனாருக்கும்,காட்டகரம் தேவருக்கும் இவர்கள் உறவினர்கள்.

தற்போது இப்பரம்பரையில் வந்தவர்களான திரு.லோகநாத வாண்டையார்
அவரது மகன்கள் திரு.சண்முகநாத வாண்டையார்திரு கமலநாத வாண்டையார் என்போர் விளந்தையில் இருக்கிறார்கள்.